இந்த புதிய பதிப்பின் உடல் ஒரு fluoro rubber strap- உடன் டைட்டானியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
 
                இந்தியாவில் Amazfit GTS-ன் விலை ரூ. 9,999
ஜியோமி ஆதரவு பிராண்ட் ஹுவாமி (Huami) தனது Amazfit GTS ஸ்மார்ட்வாட்சின் புதிய டைட்டானியம் பதிப்பை சீனாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பதிப்பில் தரமான Amazfit GTS-ல் காணப்படும் அலுமினிய உருவாக்கம் மற்றும் சிலிகான் பட்டையுடன் ஒப்பிடுகையில் ஒரு ஃப்ளோரோ-ரப்பர் பட்டையுடன் டைட்டானியம் உருவாக்கப்படுகிறது. இந்த ஒப்பனை மாற்றங்களைத் தவிர, புதிய பதிப்பின் உள்ளகங்கள் நிலையான பதிப்பைப் போலவே இருக்கின்றன.
சீன வெளியீடான MyDrivers-ன் அறிக்கையின்படி, Amazfit GTS-ன் புதிய டைட்டானியம் பதிப்பு சீன சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சம் ஸ்மார்ட்வாட்ச் சீனாவில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும். மேலும், நாம் மேலே குறிப்பிட்டது போல, இந்த புதிய பதிப்பு ஸ்மார்ட்வாட்சின் உடலுக்கு டைட்டானியத்தைப் பயன்படுத்துகிறது. இது அலுமினியத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் வலுவான அலாய் மற்றும் அரிப்பை எதிர்க்கும். கூடுதலாக, நிலையான பதிப்பில் காணப்படும் சிலிகான் பட்டை ஒரு fluoro-rubber பட்டையுடன் மாற்றப்பட்டுள்ளத., இது மென்மையான, தோல் மற்றும் அழுக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு பொருள். Amazfit GTS-ன் நிலையான பதிப்பு மற்றும் டைட்டானியம் பதிப்பிற்கு இடையிலான வேறுபாடுகளாகும்.

Photo Credit: MyDrivers
Amazfit GTS Titanium பதிப்பின் விலை CNY 1,299 (சுமார் ரூ. 13,240). இது டிசம்பர் 1 ஆம் தேதி சீனாவில் Tmall, Amazfit store on JD.com மற்றும் Youpin online store வழியாக விற்பனைக்கு வரும். கூடுதலாக, புதிய டைட்டானியம் பதிப்பை சீனாவுக்கு வெளியே உள்ள பிற பிராந்தியங்களில் வெளியிடுவது மற்றும் கிடைப்பது குறித்து எந்த வார்த்தையும் இல்லை.
இந்தியாவில் Amazfit-ன் விலை மற்றும் விவரக்குறிப்புகள்:
Huami Amazfit GTS-ன் நிலையான பதிப்பு இந்தியாவில் ரூ. 9,999-யாகவும், மேலும், அமேசான் இந்தியா வழியாக வாங்குவதற்கு கிடைக்கிறது.
Amazfit GTS, 1.65-inch AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது திருத்தக்கூடிய விட்ஜெட்களை ஆதரிக்கிறது. பேட்டரி ஆயுள் 14 நாட்கள் வரை இருக்கும் என்றும் ஸ்மார்ட்வாட்ச் 5 ATM நீர் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் இருக்கும். இது தவிர, ஆன்-போர்டு சென்சார்களில் Biotracker PPG bio-tracking ஆப்டிகல் சென்சார், 6-axis accelerometer, 3-axis geomagnetic சென்சார், pressure மற்றும் ambient light சென்சார் ஆகியவை அடங்கும். கடைசியாக, வெளிப்புற ஓட்டம் (outdoor running,), டிரெட்மில் (treadmill), நடைபயிற்சி (walking), வெளிப்புற / உட்புற சைக்கிள் ஓட்டுதல் (outdoor/indoor cycling), நீள்வட்ட பயிற்சியாளர் (elliptical trainer), திறந்த நீர் நீச்சல் (pool/open water swimming), மலையேறுதல் (mountaineering), பாதை ஓடுதல் (trail running), பனிச்சறுக்கு (skiing) மற்றும் உடற்பயிற்சி (exercising) உள்ளிட்ட 12 வெவ்வேறு விளையாட்டு முறைகளும் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
 OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                            
                                OpenAI Upgrades Sora App With Character Cameos, Video Stitching and Leaderboard
                            
                        
                     Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                            
                                Samsung's AI-Powered Priority Notifications Spotted in New One UI 8.5 Leak
                            
                        
                     iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                            
                                iQOO 15 Colour Options Confirmed Ahead of November 26 India Launch: Here’s What We Know So Far
                            
                        
                     Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims
                            
                            
                                Vivo X300 to Be Available in India-Exclusive Red Colourway, Tipster Claims