Honor Magic Watch 2-வானது மறுபெயரிட்ட Honor Watch Magic 2-ஆக இருக்கும்
Honor Magic Watch 2 தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டது
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Honor, இந்த மாதம் Honor 9X-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கூடவே, Honor Watch Magic 2 இந்தியாவுக்கு வருவதாக ஹானர் இந்தியா சமீபத்தில் ட்வீட் செய்தது. அறிமுகம் செய்வதற்கான காலக்கெடுவை நிறுவனம் குறிப்பிடவில்லை என்றாலும், வெளியீடு விரைவில் நடக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
Honor Watch Magic 2 கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்சின் 44mm வேரியண்ட் CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ. 11,300) மற்றும் 46mm வேரியண்ட் CNY 1,199 (இந்திய மதிப்பில் ரூ. 12,300) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனம், Flax Brown பதிப்பையும் CNT 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 14,300) விலையில் அறிமுகப்படுத்தியது.
Honor Magic Watch 2, stainless steel உருவாக்கத்தைக் கொண்டிருக்கும். 42mm வாட்சில் 1.2-inch circular AMOLED டிஸ்ப்ளே உள்ளது. அதன் 46mm யூனிட் பெரிய 1.39-inch டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த பெரிய வேரியண்ட், ஒரு பெரிய பேட்டரியில் 14 நாட்கள் பேட்டரி ஆயுளைக் கோருகிறது. அதே சமயம் 42mm வேரியண்ட் ஏழு நாள் பேட்டரி ஆயுளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் HiSilicon Kirin A1 SoC-யால் இயக்கப்படுகிறது மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு, அதே போன்று உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு மைக் மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கரைக் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனுடன் ஜோடியாக இருக்கும்போது, பயனர்களின் தொலைபேசி அழைப்புகளை நேரடியாக வாட்சில் எடுக்க அனுமதிக்கிறது. இந்த வாட்சில் 4GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது சாதனத்தில் பாடல்களை ஸ்டோர் செய்ய பயன்படுகிறது.
Honor Magic Watch 2-க்கான வெளியீட்டு தேதியை ஹானர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், இது Honor 9X உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கிறோம். .
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch