மலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்: "போட்" நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

போட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலிவு விலை ப்ளூடூத் ஹெட்போன் "ஏர்டோப்ஸ் 411"

மலிவு விலை வையர்லெஸ் ஹெட்போன்கள்:

போட் நிறுவனத்தின் புதிய "ஏர்டோப்ஸ் 411"

ஹைலைட்ஸ்
  • போட் "ஏர்டோப்ஸ் 411"-ன் விலை 2,999 ரூபாய்
  • சார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.
  • முன்னதாக "ஏர்டோப்ஸ் 211" 2,499 ரூபாய்க்கு அறிமுகமானது
விளம்பரம்

ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன்கள் என்றாலே, விலை சற்று உச்சியில் தான் இருக்கும். அதுவும் சிறந்த நிறுவனங்களின் ஹெட்போன்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அதுமட்டுமின்றி, ப்ளூடூத் ஹெட்போன்கள் என்றாலே, செவியின் இரண்டு பாகங்களும் ஒரு வயருடன் இணைக்கப்பட்ட அமைப்பை கொண்டிருக்கும். இந்த அமைப்பினை மாற்றவும், குறைந்த விலையில் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தவும் போட் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ஹெட்போன்தான் ஏர்டோப்ஸ்(Airdopes). தற்போது போட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மலிவு விலை ப்ளூடூத் ஹெட்போன் "ஏர்டோப்ஸ் 411" தான். இதன் விலை ரூபாய் 2,999. முன்னதாக இந்த நிறுவனம், "ஏர்டோப்ஸ் 211" என்ற ஒரு ப்ளூடூத் ஹெட்போனை அறிமுகப்படுத்தியிருந்தது.

"ஏர்டோப்ஸ் 211" விட சிறந்த பேட்டரி வசதியை கொண்டுள்ள இந்த "ஏர்டோப்ஸ் 411", 50mAh பெட்டரி அளவை கொண்டுள்ளது. ஹெட்போன்களின் இரு பாகங்களும் தனித்தனியாக 50mAh பேட்டரி அளவை கொண்டுள்ள நிலையில், இதனை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சார்ஜிங் கேஸ் 500mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. இதன் மூலம், இந்த சார்ஜ்ங் கேஸை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அதை வைத்து இந்த ஹெட்போன்களை நான்கு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், இந்த ஹெட்போன்களை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், அது 3 மணி நேரம் வரை நீடிக்கும். 

மேலும் "ஏர்டோப்ஸ் 211"-ன் சார்ஜிங் கேஸ் போல் இல்லாமல், இந்த "ஏர்டோப்ஸ் 411"-ன் சார்ஜிங் கேஸில், பேட்டரி அளவை குறிக்கும் லைட் பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஹெட்போன் ப்ளூடூத் v5, கொண்டு வெளியாகவுள்ளது. 

முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ஏர்டோப்ஸ் 211"-வின் விலை அமேசானில், 2,499 ரூபாய். தற்போது, அறிமுகமாகியிருக்கும் "ஏர்டோப்ஸ் 411"-ன் விலை அதைவிட சற்று அதிகம் என்றாலும், அதை விட பல மெம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டு வெளியாகியிருக்கிறது "ஏர்டோப்ஸ் 411". இந்த ஹெட்போன் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.


Which are the best budget Bluetooth earphones and headphones in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிளின் அதிக விலையுள்ள மடிக்க முடியாத போனாக ஐபோன் 18 புரோ மேக்ஸ் வரலாம்: கசிவு தகவல்!
  2. விரிவாக்கப்பட்ட தரவு பரிமாற்ற ஆதரவுடன் ஐபோனில் இருந்து மாறுவதை எளிதாக்குகிறது 'ஆண்ட்ராய்டு 17'
  3. 2026-இல் உங்கள் ஏர்டெல் இ-சிம்மை (Airtel eSIM) செயல்படுத்துவது எப்படி: படிப்படியான வழிகாட்டி
  4. இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக 'ஒன்பிளஸ் N6x' பேட்டரி திறன் வெளிப்படை
  5. வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் புதிய உருண்டையான செய்தி குமிழி வடிவமைப்பை அறிமுகப்படுத்துகிறது: அறிக்கை
  6. ஆப்பிள் ஹெல்த், மருத்துவப் பதிவுகளுடன் தனிப்பயன் பதில் தர ஓபன்ஏஐ 'சாட்ஜிபிடி ஹெல்த்' அறிமுகம்!
  7. iQOO Z11 Lite 5G vs Moto G37 Power vs Oppo K14x 5G: இந்தியாவில் விலை, அம்சங்கள் ஒப்பீடு
  8. 50-மெகாபிக்சல் கேமரா, 6,500mAh பேட்டரியுடன் iQOO Z11 Lite இந்தியாவில் அறிமுகம்: விலை, அம்சங்கள்
  9. மோட்டோ பேட் 70 ஆகஸ்ட் 9ல் இந்தியாவில் அறிமுகம்; டைமன்சிட்டி 6400, 10,200mAh பேட்டரியுடன் வருகிறது!
  10. வாட்ஸ்அப் இருபடிச் சரிபார்ப்பு(Two-Step Verification) PINக்கு பதிலாக வலுவான பாஸ்வேர்டை அறிமுகப்படுத்தக்கூடும்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »