பிலாபுன்ட் தயாரிப்புகள் அதிகப்படியாக ரூ.5,999 வரை விற்பனைக்கு உள்ளது.
கார்களுக்கான ஆடியோ வசதிகளை செய்வதில் உலக பிரசித்தி பெற்ற பிலாபுன்ட்(Blaupunkt) நிறுவனம் தனது தயாரிப்புகளை கார்கள் மற்றும் வாகனங்களுக்கு மட்டுமில்லாமல் தற்போது புளுடூத் ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள், இயர்போன்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிலாபுன்ட் நிறுவனம் இந்தியாவில் தற்போது 3 புதிய இயர்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. EM01 வயர்ட் இயர்போன்ஸ், BE-01 ஃபோல்ட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் மற்றும் BTW01 வயர்லெஸ் இயர்போன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இயர்போன்கள் ஆன்லையின் மற்றும் ஆஃப் லைனில் விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.499 முதல் துவங்கும் பிலாபுன்ட் தயாரிப்புகள் அதிகப்படியாக ரூ.5,999 (BTW01 வயர்லெஸ் இயர்போன்ஸ்) வரை விற்பனைக்கு உள்ளது. ஹெட்போன்களுக்கான தரச்சான்றிதழான IPX5 குழுவால் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என சான்றிதழ் கிடைத்துள்ளது. இயர்பட்ஸ்களில் டச் கன்டிரோல் உள்ள நிலையில் 590mAh பேட்டரி பவருடன் வெளியாகியுள்ளது.
பிலாபுன்ட் நிறுவனத்தின் BE-01 ஃபோல்ட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் ரூ.2,499 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புளுடூத் 5.0 கனெக்டிவிட்டியை பெற்றுள்ளது. இதற்கும் IPX5 குழுவால் தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் சான்றிதழ் தற்போது கிடைத்துள்ளது.
இந்தியாவில் வேகமாக தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிற நிலையில் பிலாபுன்ட் நிறுவனத்தின் தொலைக்காட்சி வரிசைக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy A07 5G Spotted on Bluetooth SIG Website; New Support Pages Hint at Upcoming Launch