ப்ளூடூத் v5.0 இணைப்பு கொண்ட ஒரு மலிவு விலை ஹெட்போன்ஸ், ப்ளாபுன்க்ட் BH01
அமேசானில் விற்பனையில் உள்ள ப்ளாபுன்க்ட் BH01 ஹெட்போன்
ப்ளாபுன்க்ட் நிறுவனம் என்பது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, 1923 ஆம் துவங்கப்பட்ட மிகவும் பழமையான நிறுவனம். இது கார்களுக்கான ரேடியோ மற்றும் ஒலிபெருக்கிகள் தயாரிப்பதில் பெயர் போன நிறுவனமாகும். கடந்த சில மாதங்களில், இந்த நிறுவனம் கார்களுக்கான ஒலிபெருக்கிகள் தயாரிப்பத்தைத் தாண்டி பல இடங்களில் தங்களின் ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வண்ணம், தனது உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. வீடுகளில் தொலைகாட்சிகளுக்கான ஒலிபெருக்கிகள், வயர்லெஸ் ஒலிபெருக்கிகள், ஹெட்பொன்கள் மற்றும் இயர்போன்கள் என தன் உற்பத்தியை அனைத்து பக்கங்களிலும் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ப்ளாபுன்க்ட் BH01 என்ற ஒரு மலிவு விலையிலான வயர்லெஸ் ஹெட்போன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். அமேசானில் இதன் விலை ரூ.1,699.
இந்த ஹெட்போன்ஸ் காதுகளின் மேல் பொருத்துவது போன்ற அமைப்பு கொண்டுள்ளது. மடக்கிகொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இதன் அமைப்பு, எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். மேலும் 40mm ஒலிமாற்றும் இயக்கிகள், ப்ளூடூத் v5.0 இணைப்பு கொண்டு இந்த ஹெட்போன்ஸ் செயல்படுகிறது. இந்த ஹெட்போன்ஸில் ஒரு மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் மொபைல் போன்கள் பேசிக்கொள்ள வசதியாக இருக்கும். இந்த ஹெட்போன்ஸிலேயே ஒலி அளவை மாற்றிக்கொள்ளும் பட்டன்களும் பொருத்தப்பட்டுள்ளது.
300mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஹெட்போன்ஸை, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நெரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பேட்டரி தீர்ந்துபோகும் பட்சத்தில், இதை உங்கள் மொபைல்போனில் வயர் மூலம் இணைத்து பயன்படுத்தும் வண்ணம் இந்த ஹெட்போன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இணைப்பு முறையில், இந்த ஹெட்போன்ஸை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த ஹெட்போன்ஸை பல உபயோகமான இணைப்பு வழிகளுடனேயே வெளியிட்டுள்ளது, இந்த நிறுவனம்.
சமீத்தில் இந்த நிறுவனம், ப்ளாபுன்க்ட் BTW01 என்ற ப்யூர் வயர்லெஸ் ஹெட்போன் ஒன்றை Rs.5,999-ற்கு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் இந்த நிறுவனத்தின் ஹெட்போன்ஸ்கள், அதன் தரத்தாலும், அதன் அம்சங்களாலும் பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
Which are the best budget Bluetooth earphones and headphones in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch