சாம்சங் நிறுவனம் Black Friday Sale சலுகைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது
Samsung Galaxy Watch Ultra ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது சாம்சங் Black Friday Sale பற்றி தான்.
சாம்சங் நிறுவனம் Black Friday Sale சலுகைகளை இந்தியாவில் அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது சமீபத்திய Galaxy wearables சீரியஸ் மீது பெரிய அளவிலான தள்ளுபடியைக் கொண்டுவருகிறது. சாம்சங்கின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களான Galaxy Watch 7, Watch Ultra ஆகியவை தள்ளுபடியைப் பெறுகின்றன. Galaxy Buds 3, Galaxy Buds 3 Pro மற்றும் Galaxy Buds FE ஆகியவற்றை வாங்கும் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் அல்லது ரூ. 5,000 பேனஸ் பெறலாம். Galaxy wearables தயாரிப்புகளை நோ காஸ்ட் EMI விருப்பங்களுடன் வாங்கலாம்.
Black Friday Sale விற்பனையின் ஒரு பகுதியாக சாம்சங் நிறுவனம் ரூ. 12,000 கேஷ்பேக் அல்லது போனஸ் ரூ. 10,000 சலுகையை Galaxy Watch Ultra மாடல்களுக்கு கொடுக்கிறது. இது இந்தியாவில் 59,999 ரூபாய் விலையில் ஆரம்பம் ஆகிறது. இதேபோல் கேலக்ஸி வாட்ச் 7 வாங்குபவர்கள் ரூ. 8,000 கேஷ்பேக் அல்லது போனஸ் பெறலாம். இதன் அசல் விலை புளூடூத் மாடல் 33,999 ரூபாய் அளவிலும், அடுத்த மாடல் ரூபாய் 29,999 விலையிலும் கிடைக்கிறது.
கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ இப்போது ரூ. 19,999 விலைக்கு கிடைக்கிறது. தள்ளுபடி விற்பனையில் 5,000 கேஷ்பேக் அல்லது மேம்படுத்தப்பட்ட போனஸ் கிடைக்கும். ரூ. 14,999 என்கிற சலுகை விலைக்கு வாங்கலாம், கேலக்ஸி பட்ஸ் 3 மாடலுக்கு ரூ. 4,000 கேஷ்பேக் கிடைக்கிறது, இந்த மாடலின் அசல் விலை ரூ. 14,999 ஆகும்.
சாம்சங்கின் மலிவு விலை மாடலான Galaxy Buds FE இந்தியாவில் 9,999 ரூபாய் Black Friday Sale விற்பனையில் இதனை வாங்கும் போது 4,000 கேஷ்பேக் அல்லது போனஸ் பெறலாம். Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Buds 3 Pro மற்றும் Galaxy Buds 3 ஆகியவற்றை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI ஆப்ஷனை பெறலாம்.
கூடுதலாக, சமீபத்திய கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் பெறும் வாடிக்கையாளர்கள் சாம்சங்கின் சமீபத்திய அணியக்கூடிய பொருட்களில்18000 ரூபாய் மதிப்புள்ள மல்டி-பை ஆஃபர்களைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Galaxy Watch 7, Watch Ultra மற்றும் Galaxy Buds 3 தொடர்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் Samsung Galaxy Unpacked நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. Galaxy Buds FE இயர்பட்ஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Huawei Mate XT 2 Ultimate Design Launched With Kirin 9050 Pro Chipset: Price, Specifications
Samsung Galaxy S27 Ultra, Galaxy S27 Pro Reportedly Bag 3C Certification, Charging Specifications Tipped