ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ஆனது இந்தியாவில் வரும் 19ஆம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3-ன் வெற்றியை தொடர்ந்து, ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4 அறிமுகமாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. முந்தைய மாடலை விட 30 சதவீதம் பெரிய டிஸ்பிளே மற்றும் 50 சதவீதம் கூடுதல் சத்தம் கொண்ட ஸ்பீக்கர் கொண்டு இந்த வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக என்டிடிவி கேட்ஜெட்ஸ் 360, ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ன் விலை ரூ.40,900லிருந்து தொடங்கும் என பிரத்யோகமாக தகவல் வெளியிட்டது. மேலும், இதன் அதிகபட்சமாக செல்லூலார் எடிஷன் கொண்ட 44மமீ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் கொண்ட மாடலின் விலையானது ரூ.80,900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சிரீஸின் இறுதி விலை பட்டியல் குறித்த தகவல்கள் ஆப்பில் இந்திய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச சிரீஸ் 4-ன் இந்திய விலை,
என்டிடிவி கேட்ஜெட்ஸ் 360 கடந்த மாதம் அறிவித்ததை போல, 40மமீ வகை ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ன் விலையானது ரூ.40,900 ஆகும். இதே போல் 44மமீ வகை விலையானது ரூ.43,900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சிரிஸ் 4-ல் 40 மமீ அலுமினியம் கேஸ் மற்றும் செல்லூலார் எடிஷன் கொண்ட மாடலின் விலையானது ரூ.49,900 ஆகும். இதே அலுமனியம் கேஸில் 44 மிமீ மாடலின் விலையானது ரூ.52,900 ஆகும்.
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ல் ஜிபிஎஸ் மற்றும் செல்லூலார் வகை மாடல்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே, கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ல் செல்லூலர் எடிஷன் 40மிமீ ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் வகை மற்றும் ஸ்போர்ட் கொண்ட மாடல்களும் இந்தியாவில் கிடைக்கிறது இதன் விலை ரூ.67,900ஆகும். இந்த ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் கேஸ் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4 மாடலானது, ஸ்பேஸ் பிளாக் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த ஆப்பிள் வாட்ச் 4 சிரீஸ் மாடல்கள் விற்பனையை ஆப்பிள் நிறுவனம் வரும் 19 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையை தொடங்குகிறது. இதற்கான முன்பதிவுகள், பிளிப்கார்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மேலும் பேடீம் மால் ஆன்லைன் விற்பனை தளத்தில் மட்டும் இந்த ஆப்பிள் வாட்ச் 4 சிரீஸ் 18ஆம் தேதி முதலே கிடைக்கிறது.
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4-ன் சிறப்பம்சங்கள்,
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4 ஆனது 40 மற்றும் 44மிமீ டிஸ்பிளே அளவுகளில் கிடைக்கிறது. மேலும், ஆப்பிள் எஸ் 4 எஸ்ஓசி, 64பிட் டூயல்கோர் பிராசஸர் கொண்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3-ஐ விட இரண்டு மடங்கு வேகமாக இயங்கும் திறன் கொண்டது. இதில், இதயதுடிப்பை அறியும் சென்சார்கள் உள்ளது. இதன் மூலம் இசிஜி ஆப் கொண்டு இசிஜி எடுத்துக்கொள்ளலாம். இந்த வசதி அமெரிக்காவில் இந்த வருடத்தில் வெளிவருகிறது. எனினும் இந்திய அறிமுகத்தில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 4 ஆனது வாட்ச் ஓஎஸ் 5-ல் இயங்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஸ்பிக்கர்களால் போன் கால்களின் போது 40 சதவீதம் கூடுதல் சத்தத்தை பெற முடிகிறது. இதன் பின் பக்கம் பிளாக் பேனல் கொண்டுள்ளது. மேலும் பேட்டரியை பொருத்தவரையில் முந்தைய மாடல்களில் உள்ளது போலே இதுவும் கொண்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவில் கடந்த மாதம் ஆப்பிள் வாட்ச் சிரீஸ் 3-ன் விலையானது குறைக்கப்பட்டது. இதனால், ஜிபிஎஸ் வகை மாடல்கள் ரூ.28,900 முதலும் செல்லூலார் வகை மாடல்கள் ரூ.37,900 முதலும் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்