அமேஸ்பிட் வாட்ச் எப்போதும் அதன் நிறத்திற்கு பெயர் பெற்றது ஆகும். கண்னைக் கவரும் டிசைன்களில் காட்சியளிக்கும்.
மூன்று வித நிறங்களில் அமேஸ்பிட் பிப் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படுகிறது
ஹூவாமி நிறுவனத்தின் புத்தம் புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச் வரும் 29 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹூவாமி தற்போது அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் (Amazfit Bip S Lite) என்ற ஸ்மார்ட்வாட்ச்சைத் தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அமேஸ்ஃபிட் தளத்திலும், ஃபிளிப்கார்ட்டிலும் பெற முடியும்.
இந்த ஸ்மார்ட்வாட்ச் மூன்று விதமான கலர் வேரியண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. 30 நாட்கள் வரையில் பேட்டரி நீடித்து நிற்கும். மிகமெல்லிதாக, எடைகுறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டெண்ட் தொழில்நுட்பமும் உள்ளது.
அமேஸ்பிட் பிப் எஸ் லைட் விலை:
இந்தியாவில் அமேஸ்பிட் எஸ் லைட் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.3,799 என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இந்தப் பொருள் வரும் 29 ஆம் தேதி அறிமுகமாகும் போது, அறிமுக சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமேஸ்பிட் பிப் எஸ் லைட் சிறப்பம்சங்கள்:
அமேஸ்பிட் வாட்ச் எப்போதும் அதன் நிறத்திற்கு பெயர் பெற்றது ஆகும். கண்ணைக் கவரும் டிசைன்களில் காட்சியளிக்கும். அந்த வகையில், தற்போது அறிமுகமாகவுள்ள அமேஸ் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச்சும் மூன்று விதமான நிறங்களில் உள்ளன. ஆனால், இதன் திரை அளவு, பிக்சல் குறித்த விவரங்கள் அறிமுக தினத்தன்றுதான் தெரியவரும்.
இரண்டு விதமான கஸ்டம் விட்ஜெட்களுடன், எட்டு விதமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. யோகா, சைக்கிளிங், வாக்கிங், ரன்னிங், ஜிம் வொர்க் அவுட் உள்ளிட்ட மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களது செயல்பாடுகளை அமேஸ்பிட் ஆப்பின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல், வானிலை நிலவரம், ஸ்லீபம் மானிட்டர், இதயத்துடிப்பு உணர்திறன் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் எடை வெறும் 30 கிராம் ஆகும்.
Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S26 Ultra Users Report Setup Screen Freeze After One UI 9 Update
Marvel's Wolverine Was the Best-Selling Game in the US in September