இந்தியாவில் சியோமி அறிமுகம் செய்துள்ள வீடுகளுக்கான பாதுகாப்பு கேரமா!

1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்துகிறது

இந்தியாவில் சியோமி அறிமுகம் செய்துள்ள வீடுகளுக்கான பாதுகாப்பு கேரமா!

Photo Credit: எம்ஐ.காம்

எம்ஐ.காம் வலைதளத்தில், இந்த கேமரா குறைந்த விலையில் வெளியாகிறது.

ஹைலைட்ஸ்
  • எம்ஐ-யின் வீடுகளுக்கான பாதுகாப்பு கேமரா அறிமுகம்!
  • இன்ஃப்ரா ரெட், நையிட் விஷன் போன்ற பல அம்சங்களுடன் வெளியீடு
  • நாளை மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வெளியிடப்படுகிறது.
விளம்பரம்

சியோமி நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்து டீசரை நேற்று வெளியிட்டது. இந்நிலையில் இன்று அந்நிறுவனம் சார்பாக எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமரா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

‘நெவர் டேக் யுவர் ஐஸ் ஆஃப்' என்ற பன்ச் லைனுடன் நேற்று டீசர் வெளியாகிய நிலையில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த கேமரா. ஏற்கெனவே ரூபாய் 2,699க்கு எம்ஐ ஹோம் செக்கியூரிட்டி கேமராக்கள் இந்தியாவில் விற்பனையாகும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை ரூபாய் 2,299 க்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுக விலையாக எம்ஐ.காமில் ரூபாய் 1,999க்கு இந்த செக்கியூரிட்டி கேமரா விற்பனையாக உள்ளது. நாளை (பிப்ரவரி 14 ஆம் தேதி) மதியம் சுமார் 12 மணி அளவில் அந்த தயாரிப்பு விற்பனையை தொடங்கப்பட உள்ளது. மேலும் வாடிக்கையாளர்க்கு இந்த சேலை நினைவூட்ட நோடிஃபிக்கேஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது எம்.ஐ.

1080p வீடியோ க்ளாரிட்டி கொண்ட இந்த பாதுகாப்பு கேமரா 130 டிகிரி பரந்த கோணம் கொண்ட லென்ஸை பயன்படுத்துகிறது. செயற்கை நுண்ணறிவு, இன்ஃப்ரா ரெட் இரவு பார்வை, இரண்டு வழி ஆடியோ பதிவு மற்றும் பாதுகாப்பான சேமிப்பு வசதி போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது இந்த கேமரா.

மேலும் பிக்சர் இன் பிக்சர் எனப்படும் புதிய மல்டி டாஸ்கிங் அமைப்பையும் முன்னணி ஐபோன் மற்றும் அண்ட்ராய்டு மாடல் போன்களில் எம்.ஐ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியால 10 கோடி பேர் ChatGPT யூஸ் பண்றாங்களா? வாராந்திர பயனர்களில் இந்தியா 2-வது இடம்! மாணவர்கள் தான் டாப்
  2. Vivo X300 FE லான்ச் ரெடி! 90W சார்ஜிங் கூடவே 6500mAh பேட்டரியா? விவோ-வின் இந்த பட்ஜெட் பிளாக்ஷிப் போன் பத்தி தெரிஞ்சிக்கோங்க
  3. சாம்சங் ஃபோல்டபிள் போன்ல இனிமே அந்த பிரச்சனை இருக்காது! புதிய "Wide" டிசைன் ரெடியாகுது! இதோ லீக் ஆன தகவல்கள்
  4. Apple-ல இருந்து மலிவு விலையில ஒரு MacBook-ஆ? அதுவும் செம்ம கலர்ஸ்ல வருதா? ஆப்பிள் பிரியர்களுக்கு இதோ ஒரு செம்ம குட் நியூஸ்
  5. AI உலகமே டெல்லிக்கு வருது! இந்தியாவின் முதல் AI Impact Summit 2026 - எப்படி Register செய்வது? Full Schedule இதோ
  6. பட்ஜெட் விலையில ஒரு தரமான சம்பவம்! Lava Yuva Star 3 லான்ச் ஆகிடுச்சு! 5000mAh பேட்டரியோட ஒரு 'ஸ்டார்' போன்
  7. மியூசிக் லவ்வர்ஸ்க்கு ஒரு குட் நியூஸ்! Sony WF-1000XM6 லான்ச் ஆகிடுச்சு! நாய்ஸ் கேன்சலேஷன்ல இதுதான் இப்போ ராஜா
  8. சும்மா சில்லுன்னு ஒரு நியூஸ்! Panasonic 2026 AC Range இப்போ இந்தியாவில லான்ச் ஆகிடுச்சு! தூசி படியாது, கரண்ட் மிச்சம்
  9. பட்ஜெட் விலையில ஒரு ஃபிளாக்ஷிப் கில்லர்! Infinix Note 60 Ultra கீக்பெஞ்ச்ல லீக் ஆகிடுச்சு! 200MP கேமரா, சாட்டிலைட் கனெக்டிவிட்டினு மிரட்டுது
  10. இனி பெரிய அடாப்டர் தேவையில்லை! சியோமியோட குட்டி 'மினி GaN' சார்ஜர் லான்ச் ஆகிடுச்சு! கேபிளும் உள்ளயே இருக்கு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »