iPhone பயனர்கள், Apple-இன் பீட்டா திட்டத்தில் இணைவதன் மூலம், iOS 26.5 பரவலான பயனர்களுக்கு வெளியிடப்படுவதற்கு முன்பே அதனை அனுபவிக்க முடியும்.
iOS 26.5 beta 1 reportedly brings Live Activities support for third-party wearables
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட iOS 26.4 தற்போது பயன்பாட்டிலுள்ள நிலையான (Stable) பதிப்பாகும். ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இடையே பாதுகாப்பான (End-to-end encrypted) RCS குறுஞ்செய்தி வசதியை இந்த அப்டேட் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலையான பதிப்பில் அது இடம்பெறவில்லை. இந்நிலையில், டெவலப்பர்களுக்கான iOS 26.5-ன் முதல் பீட்டா பதிப்பை ஆப்பிள் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இடையேயான அந்தப் பாதுகாப்பான RCS மெசேஜிங் வசதி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆப்பிள் மேப்ஸ்-ல் 'Suggested Places' வசதி
திங்கட்கிழமை அன்று ஆப்பிள் நிறுவனம் iOS 26.5 மற்றும் iPadOS 26.5-ன் முதல் பீட்டா பதிப்பிற்கான குறிப்புகளை வெளியிட்டது.
பரிந்துரைகள்: 'MacRumors' அறிக்கையின்படி, ஆப்பிள் மேப்ஸ்-ல் (Apple Maps) புதிய “Suggested Places” வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பிரபலமான இடங்களைப் பரிந்துரைக்கும்.
விளம்பரங்கள்: எதிர்காலத்தில் ஆப்பிள் மேப்ஸ் தேடல் முடிவுகளில் வணிக நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்கான அடித்தளமாக இது பார்க்கப்படுகிறது. பயனரின் இருப்பிடம் அல்லது தேடலின் அடிப்படையில் இந்த விளம்பரங்கள் காட்டப்படும் என்றும், அவை 'விளம்பரம்' (Ads) எனத் தெளிவாகக் குறிப்பிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான மெசேஜிங்: ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இடையே அனுப்பப்படும் RCS மெசேஜ்களுக்குப் பாதுகாப்பான 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' (End-to-end encryption) வசதி இந்த பீட்டா பதிப்பில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது செட்டிங்ஸ் (Settings) பகுதியில் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் இருந்தாலும், இயல்பாகவே (Default) செயல்பாட்டில் இருக்கும். மற்ற பிராண்ட் இயர்போன்கள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப, ஏர்பாட்ஸ் (AirPods) போலவே பிற நிறுவனங்களின் வயர்லெஸ் இயர்போன்களையும் (TWS) எளிதாக இணைக்கும் 'ப்ராக்ஸிமிட்டி பேயரிங்' (Proximity pairing) வசதியை ஆப்பிள் சோதனை செய்து வருகிறது.
ஸ்மார்ட்வாட்ச் வசதிகள்: ஆப்பிள் வாட்ச் போலவே, மற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களிலும் ஐபோன் அறிவிப்புகளைப் (Notifications) பெறவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் (React) இந்த அப்டேட் வழிவகை செய்கிறது. மேலும் 'லைவ் ஆக்டிவிட்டிஸ்' (Live Activities) வசதியும் இனி மற்ற நிறுவனங்களின் அணியக்கூடிய சாதனங்களுடன் (Wearables) ஒத்துப்போகும்.
மேஜிக் கீபோர்டு: ஐபோனை USB Type-C போர்ட் வழியாக மேஜிக் கீபோர்டுடன் இணைக்கும்போது, அது தானாகவே ப்ளூடூத் மூலம் இணைந்துகொள்ளும்.
டேட்டா பரிமாற்றம்: ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு மாறும்போது, குறிப்பிட்ட மெசேஜ் அட்டாச்மென்ட்களை மட்டும் தேர்ந்தெடுத்து மாற்றிக்கொள்ளும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
WhatsApp May Launch a Guest Calls Feature, Allowing People Without an Account to Join Calls
Sony and Guerrilla Games Reportedly Working on a New Killzone Project