இந்தியாவில் கடந்த வாரம் சியோமி நிறுவனம் தயாரிப்பில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், போன்களுக்கே அதிக முக்கியதுவம் கொடுக்காமல் சியோமி நிறுவனம், அதன் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் புதிய தொலைக்காட்சி மாடல் ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் கிளைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. ப்ளுடூத்தால் பவரூட்டபட்ட ரிமோட் மற்றும் 7,00,000 நிகழ்சிகளுடன் இந்த ஸ்மார்ட் தொலைக்காட்சி வெளியாக உள்ளது. இந்தத் தொலைக்காட்சியில் கூகுளின் 'வாய்ஸ் அஸிஸ்டென்ட்' வசதியும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சியின் விலை (இந்தியா):
இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சி, ரூபாய் 12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதியம் 12 மணி முதல் பல ஆன்லைன் தளங்களில் இந்தத் தொலைக்காட்சி விற்பனைக்கு வெளியாகிறது.
ஏற்கெனவே இந்த பட்ஜெட் தொலைக்காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இந்தத் தயாரிப்பு வெளியாவதற்கு முன்னரே 'கார்டில்' தேர்வு செய்து வைத்துக்கொள்வது சுலபமாக வாங்க வழி வகுக்கும்.
எம்ஐ டிவி 4A ப்ரோ 32 தொலைக்காட்சி சிறப்பம்சங்கள்:
இந்தத் தயாரிப்பின் பெயரிலேயே 32 இஞ்ச் ஹெச்டி திரை இருக்கும் நிலையில் இந்த தொலைக்காட்சி 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி சேமிப்பு வசதியுடன் வெளியாகிறது. மேலும் 178 டிகிரி கோணம், பாட்ச்வால் யுஐ கொண்ட இந்தத் தொலைக்காட்சி 64 பிட் குவாட் கோர் அமலாஜிக் கோர்டெக்ஸ்-A53 பிராசஸரால் பவரூட்டப்பட்டுள்ளது.
இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், 3 ஹெச்டி போர்ட்கள் மற்றும் பல முக்கிய அம்சங்களுடன் இந்தத் தயாரிப்பு இன்று வெளியாகிறது. இந்தத் தகவலுடன் 'ஸ்போர்ட்ஸ் ப்ளுடூத் இயர்போன்ஸ் பேசிக்' தயாரிப்பின் விலையாக ரூ.1,499யை அறிவித்துள்ளது எம்ஐ நிறுவனம். இந்த இயர்போன்ஸை எம்ஐ.காம் தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்