மெட்ஸின் ஆண்ட்ராய்டு டிவி, 4 வகைகளில் கிடைக்கும்
பல வகை ஆண்ட்ராய்டு டிவிக்களை அறிமுகம் செய்துள்ள மெட்ஸ், 12,999 முதல் டிவி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆன்லைன் கன்டென்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் டிவிக்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. Vu, டி.சி.எல், சியோமி போன்ற நிறுவனங்கள், இந்த வகை டிவிக்களில் அதிரடி விற்பனையை ஆரம்பித்துள்ள நிலையில், பல சிறிய நிறுவனங்களும் அட்டகாச ஆஃபருடன் சந்தையில் போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெர்மன் பிராண்டான மெட்ஸ் (Metz), தனது ஆண்ட்ராய்டு டிவியை அமேசான் தளம் மூலம் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. பல வகை ஆண்ட்ராய்டு டிவிக்களை அறிமுகம் செய்துள்ள மெட்ஸ், 12,999 முதல் டிவி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
மெட்ஸின் ஆண்ட்ராய்டு டிவி, 4 வகைகளில் கிடைக்கும். M32E6 என்கின்ற எச்.டி டிவி, 12,999 ரூபாய்க்குக் கிடைக்கும். M40E6 என்கின்ற முழு எச்.டி திரை கொண்ட டிவி, 20,999 ரூபாய்க்குக் கிடைக்கும். M40G2 என்கின்ற 4கே ரெசல்யூஷன் கொண்ட டிவி, 36,999 ரூபாய்க்குக் கிடைக்கும். M55G2 என்கின்ற 4கே ரெசல்யூஷன் கொண்ட டிவி, 42,999 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த அனைத்து டிவிக்களும், ஸ்மார்ட் டிவி வகையைச் சேர்ந்தவை. ஆண்ட்ராய்டு டிவி 8.0 மூலம் இயங்கும். யூடியூப், கூகுள் ப்ளே மூவிஸ், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஆப்களின் சப்போர்டோடு இந்த டிவி வரும்.
மேலும் கூகுள் ப்ளேவுக்கு ஆண்ட்ராய்டு டிவி மூலம் போக முடியும் என்பதால், வாடிக்கையாளர் விருப்பமுடைய செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல யூடியூப்-ற்கு நேரடியாக செல்லும் வசதி இருப்பதால், பல இலவச கன்டென்ட்களைப் பார்க்க முடியும்.
வாய்ஸ் ரிமோட் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் வசதியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். டி.டி.எஸ் சவுண்டு, குவாட்-கோர் ப்ராசஸர், எச்.டி.ஆர் சப்போர்ட், எச்.டி.எம்.ஐ, யூ.எஸ்.பி, வை-ஃபை இணைப்பு வசதி உள்ளிட்டவைகளை இந்த மெட்ஸ் டிவி கொண்டிருக்கும்.
1938 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் மெட்ஸ். அதே நேரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு சீன மின்னணு நிறுவனமான ஸ்கைவோர்த், மெட்ஸை வாங்கியது. தற்போது மெட்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஆண்ட்ராய்டு டிவி வகைகள் முன்னரே சந்தையில் இருக்கும் டிவிக்களுடன் நேரடியாக போட்டியின உள்ளன. இந்த ஆண்ட்ராய்டு டிவி வகையில் சியோமி நிறுவனம், 32 இன்ச் கொண்ட Mi TV 4C ப்ரோவை, 12,999 ரூபாய்க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India