Photo Credit: Ather Energy
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Ather 450 series எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தான்.
Ather Energy நிறுவனம் ஜனவரி 4ல் அதன் பிரபலமான மின்சார ஸ்கூட்டர் Ather 450 series புதுப்பிக்கப்பட்ட மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 450S, 450X, 2.9kWh, 450X 3.7kWh மற்றும் 450 Apex ஆகியவை அடங்கும். இந்தியாவில் அனைத்து மாடல்களும் விலை உயர்வைப் பெற்றிருந்தாலும், பல-மோட் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், 'மேஜிக் ட்விஸ்ட்' ரீஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அனைத்து மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் முந்தைய தலைமுறை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது அதிக கிலோ மீட்டர் வரம்பைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 2025 Ather 450 சீரிஸ் விலை 450S மாடல் ரூ1,29,999 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் ஆரம்பம் ஆகிறது. 2025 Ather 450X மாடலில் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களுடன் வழங்கப்படுகிறது. இது 2.9kWh மற்றும் 3.7kWh திறன் கொண்டது. இதன் விலை முறையே ரூ. 1,46,999 மற்றும் ரூ. 1,56,999 ஆகும். முறையே. 2025 Ather 450 Apex விலை ரூ. 1,99,999 (எக்ஸ்-ஷோரூம்) வருகிறது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் போது, வாங்குபவர்கள் ப்ரோ பேக்கை தேர்வு செய்யலாம். இதன் விலை ரூ. 14,001 முதல் ரூ. 20,000 வரை EV மாடலைப் பொறுத்து வருகிறது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏதர் 450X மற்றும் 450 Apex ஸ்கூட்டர் நழுவுவதைத் தடுக்க Multi-Mode Traction Control தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இதில் ஈரமான சாலைக்கு Rain Mode, சாதாரண சாலைக்கு Road Mode மற்றும் ஆஃப்-ரோடிங்கிற்கு Rally Mode ஆகியவை அடங்கும்.இது தினசரி சவாரிகளுக்கான வேகமான முடுக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு இடையே சமநிலையை உருவாக்குகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இனி 161 கிமீ தூரம் வரை செல்லும்.
2025 Ather 450 சீரியஸ் ஸ்கூட்டர்கள் மேஜிக் ட்விஸ்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைக் கொண்டுவருகிறது. பின்னோக்கி த்ரோட்லிங் செய்வதன் மூலம் வேகத்தை குறைக்கலாம். த்ரோட்டில் மூலம் இந்த மின்சார ஸ்கூட்டரை கட்டுப்படுத்த முடியும். ப்ரோ பேக்கைத் தேர்ந்தெடுப்பவர்கள் புதிய ஏதர் ஸ்டேக்கைப் பெறலாம். இது வாட்ஸ்அப் ஆன் டாஷ், ஷேர் லைவ் லொகேஷன், பிங் மை ஸ்கூட்டர், அலெக்சா ஸ்கில்ஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆறு செயல்பாடுகளைக் கொண்டுவருகிறது.
ஏத்தர் 450S இப்போது அதிகபட்சமாக 122 கிலோமீட்டர் இந்திய டிரைவிங் சைக்கிள் (IDC) வரம்பையும், 0-80 சதவீதம் சார்ஜிங் நேரம் 5 மணி 30 நிமிடங்களையும் கொண்டுள்ளது. Ather 450X ஆனது 126 கிலோமீட்டர்கள் மற்றும் 3-மணிநேர சார்ஜிங் நேரத்தைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் 3.7kWh மாடல் 4 மணிநேரம் மற்றும் 30 நிமிடங்களின் சார்ஜிங் நேரத்துடன் 161 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்