மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மொபைல் போனில் அதிக சார்ஜ் இருப்பதைத்தான் மக்கள் தற்போது அதிகம் விரும்புகின்றனர். இதனால் குறைந்தது 4,000 முதல் 6,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட மொபைல்கள சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.
குவால்கம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி., 5 ஜி நெட்வொர்க், 5,000 ஆம்ப் பேட்டரி பவர், 33 வாட்ஸ் வேகமான சார்ஜிங், டைப் சி சார்ஜிங் போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜேக் ஆகியவற்றை கொண்டாக இந்த மொபைல் இருக்கும்.
ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ், லைட் சில்வர், ரேசிங் ப்ளூ, ஸ்பீட் பிளாக் ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜூலை 2-ம்தேதி இந் த மொபைல் வெளியிடப்படுகிறது.
மக்கள் மிக அதிகமாக ஸ்மார்ட்போனை உபயோகித்து வருவதால், அதில் அதிக பேட்டரி பேக் அப்களை, மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்மார்ட் போன்களை ஒரு நாளைக்கு குறைந்த 2-3 முறையாவது முழுமையாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பக்காவான கேமரா பலமான பேட்டரி மற்றும் சார்ஜ் வசதிகள் ஆகியவை இந்த போனுக்கு பலம் சேர்க்கின்றன. பட்ஜெட் ஸ்மார்ட் போன் பிரியர்களை இந்த மொபைல் திருப்திபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.