ஃப்ளாக்ஷிப் கில்லர் Poco திரும்பி வந்துட்டான்! F8 Ultra மற்றும் Pro பற்றி வெளியான அதிரடி லீக்ஸ்

Poco F8 Ultra மற்றும் Poco F8 Pro ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய அறிமுகம் விரைவில் நடக்கலாம் என டிப்ஸ்டர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்

ஃப்ளாக்ஷிப் கில்லர் Poco திரும்பி வந்துட்டான்! F8 Ultra மற்றும் Pro பற்றி வெளியான அதிரடி லீக்ஸ்

Photo Credit: Poco

ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC உடன் கூடிய போக்கோ F7 அல்ட்ரா, ஸ்னாப்டிராகன் 8 எலீ SoC ஆல் இயக்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • Poco F8 Ultra மற்றும் F8 Pro மாடல்கள் உலகளவில் விரைவில் அறிமுகமாகவுள்ளன
  • Poco F8 Ultra-வில் Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் மற்றும் 7000mAh Batt
  • 100W Fast Charging, 50MP Triple Camera மற்றும் IP69 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ
விளம்பரம்

Poco ரசிகர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட் வந்திருக்கு! ஃப்ளாக்ஷிப் கில்லர்ஸ்-னு பேர் எடுத்த Poco, அவங்களுடைய அடுத்த தலைமுறை F8 சீரிஸ் போன்களை கூடிய சீக்கிரம் குளோபல் மார்க்கெட்ல லான்ச் பண்ண போறாங்க. அதுதான் Poco F8 Ultra மற்றும் Poco F8 Pro. இந்த போன்கள் உலகளவில், அதுவும் மார்ச் மாசத்துக்கு முன்னாடியே லான்ச் ஆக அதிக வாய்ப்பிருக்குன்னு சர்ட்டிஃபிகேஷன் தளங்கள்ல இருந்து தகவல் வெளியாயிருக்கு. இது போன F7 சீரிஸ்-ஸ விட ரொம்ப சீக்கிரமா லான்ச் ஆகுறது குறிப்பிடத்தக்கது. இப்போ இந்த Poco F8 Ultra-ல என்னென்ன எதிர்பார்க்கலாம்னு பார்க்கலாம். லீக் ஆன தகவல்படி, இது Redmi K90 Pro Max-ஓட ரீபிராண்டட் வெர்ஷனா இருக்கலாம்னு சொல்லப்படுது. இதுல Qualcomm-ன் லேட்டஸ்ட் மற்றும் சக்திவாய்ந்த Snapdragon 8 Elite Gen 5 சிப்செட் இருக்கும். பெர்ஃபார்மன்ஸ்ல எந்த குறையும் இருக்காது!

அடுத்து பேட்டரி. இந்த போன்ல ஒரு பெரிய 7000mAh Battery எதிர்பார்க்கப்படுது. இது Poco F7-ல் இருந்த 5300mAh பேட்டரியை விட பெரிய அப்கிரேட். இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண, 100W Wired Fast Charging சப்போர்ட்டும், Wireless Charging ஆதரவும் இருக்குன்னு சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லாம, IP69 ரேட்டிங் கூட இருக்காம். அதாவது, டஸ்ட் மற்றும் தண்ணியால இந்த போனுக்கு எந்தப் பிரச்னையும் வராது.

கேமராவைப் பொறுத்தவரை, Poco F8 Ultra-வில் 50MP Primary Camera உடன் OIS, 50MP Ultrawide லென்ஸ் மற்றும் 50MP Periscope Telephoto லென்ஸ் அடங்கிய Triple Rear Camera செட்டப் இருக்கும்னு சொல்லியிருக்காங்க. முன்னாடி, செல்பிக்காக 32MP-க்கு பதிலா, 50MP Front Camera கொடுக்கப்படலாம்னு எதிர்பார்க்கப்படுது.

டிஸ்பிளே-வைப் பத்தி பேசணும்னா, இதுல 1.5K அல்லது 2K ரெசல்யூஷன் கொண்ட LTPO AMOLED Display இருக்கும். அதுவும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டோட வரும். கூடவே Ultrasonic Fingerprint Sensor மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் கூட இந்த போன்ல இருக்கும்னு தகவல் வெளியாயிருக்கு.

Poco F8 Pro மாடலைப் பொறுத்தவரை, இதுலயும் 7000mAh Battery, 45W Fast Charging, Snapdragon 8 Elite சிப்செட் மற்றும் 144Hz AMOLED Display போன்றவை இருக்கும்னு சொல்லியிருக்காங்க.

விலையைப் பொறுத்தவரை, Poco F8 Ultra-ன் விலை இந்தியால சுமார் ₹56,990-ல இருக்கலாம்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. இது ஒரு ஃப்ளாக்ஷிப் ரேஞ்ச் விலைதான்.
மொத்தத்துல, Poco F8 Ultra ஒரு மாஸ்ஸான பேட்டரி, டாப்-எண்ட் ப்ராசஸர் மற்றும் அசத்தலான கேமரா செட்டப்போட வரப்போகுது. இந்த போன் பத்தி உங்க கருத்து என்ன? இந்த Poco F8 Ultra-வை வாங்க நீங்க தயாரா? கமெண்ட்ல சொல்லுங்க.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »