OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்

OnePlus Ace 6 Pro Max ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்

Photo Credit: OnePlus

OnePlus Ace 6 Pro Max ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன்

ஹைலைட்ஸ்
  • உலகின் முதல் Snapdragon 8 Gen 5 சிப்செட் உடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்
  • இதில் 16GB LPDDR5x RAM மற்றும் 1TB UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் கிடைக்கும்
  • 8,000mAh Battery மற்றும் 100W Fast Charging ஆதரவு இருக்கும்
விளம்பரம்

OnePlus ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வந்திருக்கு. அதுவும் அதோட பெர்ஃபார்மன்ஸ்-க்கு பேர் போன Ace சீரிஸ்-ல இருந்து! OnePlus Ace 6 Pro Max போன் பத்தின முக்கிய அம்சங்கள் மற்றும் அதோட லான்ச் டைம்லைன் இப்போ லீக் ஆகியிருக்கு. இந்த போன்ல இருக்கிற முக்கியமான விஷயம் என்னன்னா, இது உலகின் முதல் Snapdragon 8 Gen 5 சிப்செட் உடன் லான்ச் ஆகுற முதல் போனா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. Qualcomm-ஓட அடுத்த தலைமுறை சிப்செட் பவர் இதுல இருக்கப்போகுதுன்னா, பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கும்னு நீங்களே

கற்பனை பண்ணிப் பாருங்க!

அடுத்து RAM மற்றும் ஸ்டோரேஜ். இந்த போன்ல 16GB LPDDR5x Ultra RAM ஆப்ஷன் மற்றும் 12GB RAM ஆப்ஷனும் கிடைக்கும். ஸ்டோரேஜைப் பொறுத்தவரைக்கும், 256GB, 512GB, மற்றும் மிரட்டலான 1TB UFS 4.1 ஸ்டோரேஜ் வேரியண்டுகளிலும் இது வரலாம்னு தகவல் வந்திருக்கு. பெரிய ஃபைல்கள், கெய்ம்ஸ்னு எது வேணாலும் தாராளமா ஸ்டோர் பண்ணலாம்.

இந்த Ace 6 Pro Max-ல 8,000mAh Battery கொடுக்கப்படலாம்னு ரூமர்ஸ் சொல்லுது. இது Ace சீரிஸ்லயே பெரிய பேட்டரி! கூடவே, 100W Fast Charging சப்போர்ட்டும் இருக்கு. அதனால அவ்வளவு பெரிய பேட்டரியை கூட ரொம்ப வேகமா சார்ஜ் பண்ணிடலாம்.
டிஸ்பிளே-வைப் பற்றி பேசணும்னா, இதுல 6.7-இன்ச் OLED Display இருக்கும். அதுவும் 1.5K Resolution மற்றும் செம ஃபாஸ்ட்டான 165Hz Refresh Rate உடன் வரலாம். கெய்மிங் மற்றும் ஸ்க்ரோலிங் அனுபவம் வேற லெவல்ல இருக்கும்.

கேமராவைப் பொறுத்தவரை, பின்னாடி 50MP Primary Sensor (OIS உடன்) மற்றும் 8MP அல்ட்ராவைடு லென்ஸ் கொண்ட Dual Rear Camera செட்டப் இருக்கும். செல்ஃபிக்காக 32MP கேமரா எதிர்பார்க்கப்படுது. மேலும், இதுல டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், Ultrasonic In-Display Fingerprint Sensor, NFC, மற்றும் மெட்டல் மிட்-ஃப்ரேம் போன்ற பல ஹை-எண்ட் அம்சங்களும் இருக்கு. இது Android 16 அடிப்படையிலான ColorOS 16-ல இயங்கும்.

இந்த போன் நவம்பர் இறுதிக்குள் சீனாவில் அறிமுகமாகலாம். மேலும், இந்த போன் இந்தியாவுக்கு வரும்போது OnePlus 15R என்ற பெயரில் ரீபிராண்ட் ஆகி வரலாம்னு எதிர்பார்க்கப்படுது.

மொத்தத்துல, OnePlus Ace 6 Pro Max ஒரு பவர்ஃபுல் சிப்செட், பெரிய பேட்டரி மற்றும் அதிக RAM ஸ்டோரேஜ்னு ஒரு கம்ப்ளீட் ஃபிளாக்ஷிப் போனுக்குரிய எல்லா அம்சங்களோட வரப்போகுது. இந்த Snapdragon 8 Gen 5 சிப்செட்-ஓட முதல் போன் இதுவாகத்தான் இருக்குமா? உங்க கருத்து என்னன்னு கமெண்ட்ல சொல்லுங்க.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »