டிசம்பர் 1 முதல் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தும் ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா!!

விளம்பரம்
Written by Agencies மேம்படுத்தப்பட்டது: 19 நவம்பர் 2019 11:12 IST
ஹைலைட்ஸ்
  • டிச.1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்
  • ஏர்டெல் மற்றும் வோடஃபோனுக்கு 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்
  • வோடஃபோன் ஐடியா ரீசார்ஜ் கட்டணங்கள் பல மடங்கு உயரலாம்.

வோடாஃபோன் ஐடியா ரீசார்ஜ் கட்டணங்கள் பல மடங்கு உயரலாம்.

தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி அழுத்தத்தின் காரணமாக அடுத்த மாதம் முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக வோடாஃபோன் ஐடியா லிமிடெட் (VIL) அறிவித்துள்ளது.

முன்னதாக, தொலைபேசி அனுமதி பெற்ற நிறுவனங்கள் தங்கள் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில் (ஏஜிஆர்) குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு அனுமதி (லைசென்ஸ்) கட்டணமாகவும், கூடுதலாக ஸ்பெக்ட்ரம் (அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு) பயன்பாடு கட்டணமாகவும் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை தொடர்ந்து, பாரதி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் ஐடியா உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களும், கடைசியாக இந்த நிலுவைத் தொகைகளை வழங்கும் போது பாரிய நிகர இழப்புகளை வெளியிட்டது. 

இதுதொடர்பாக வேடாஃபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்த்தப்பட்ட கட்டணங்கள் வரும் டிச.1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. எனினும், எவ்வளவு கட்டணம் உயர்த்த உள்ளது என்பது குறித்த எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.  

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையற்ற மொபைல் சேவைகளை தொடர்ந்து வழங்குவதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவின் பார்வையை உணர்ந்து எங்களின் உரிய பங்கை வகிப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், இந்திய சந்தையில் இருந்து வோடாஃபோன் வெளியேறுவதாக வெளிவந்த வதந்திகளுக்கும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வேடாஃபோன் சிஇஓ ரவீந்தர் தக்கர் கடந்த வாரம் கூறும்போது, அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது என்றும் நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் பணியில் உள்ளோம் என்றும் கூறியிருந்தார். 

மொபைல் டேட்டா சேவைகளுக்கான தேவைகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.

தொலைத்தொடர்பு துறையில் கடுமையான நிதி அழுத்தம் ஏற்பட்டுள்ளதை அனைத்து பங்குதாரர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக தொடர்ந்து, தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவானது ஆராய்து வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கூட்டாக தெரிவித்தன. சமீபத்தில் வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய காரணத்தால் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

அதன்படி, இந்தியாவில் வேறு எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் ஏற்படாத மிகப்பெரிய இழப்பை இந்நிறுவனங்கள் சந்தித்துள்ளன. வோடஃபோன் ஐடியா நிறுவனத்திற்கு ரூ.50,921 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.23,045 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

வோடஃபோன் ஐடியா இந்தியாவில் தன்னை அதிவிரைவில் வளர்த்துக்கொண்டு வருகிற 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 பில்லியன் இந்திய மக்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம் என தெரிவித்துள்ளது. 
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vodafone, Vodafone Idea, Idea, Telecom
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பிளிப்கார்ட் சலுகை: ஒப்போ Find X9 Ultra போனுக்கு ₹17,000 அதிரடி விலை குறைப்பு!
  2. ரியல்மி P4R 5G vs ஒன்பிளஸ் நோர்ட் CE 6 லைட் vs போகோ M8 5G : சிறந்த பட்ஜெட் 5G ஸ்மார்ட்போன் ஒப்பீடு
  3. பிளிப்கார்ட் சேல்: மோட்டோரோலா போன்களுக்கு ₹15,000 வரை அதிரடி தள்ளுபடி!
  4. ரெட்மி டர்போ5 இந்தியா அறிமுகம்:வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  5. சாம்சங் கேலக்ஸி போனில் புதிய நெட்வொர்க் ஸ்பீட் இண்டிகேட்டர் அம்சத்தை இயக்குவதற்கான படிப்படியான வழிகாட்டி
  6. வாட்ஸ்அப் விரைவில் கூடுதல் அம்சங்களுடன் மெட்டா ஒன் பிளஸ், மெட்டா ஒன் பிரீமியம் சந்தாக்களை வழங்கக்கூடும்
  7. சாம்சங் கேலக்ஸி S25 எட்ஜ் விலை இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்தது: விவரக்குறிப்புகள், அம்சங்கள்
  8. போவா 8 விமர்சனம்: தைரியமான வடிவமைப்பு, பெரிய லட்சியங்கள்
  9. வாட்ஸ்அப்பின் ‘செடியூல்டு மெசேஜஸ்’ அம்சம் வெளியீட்டிற்கு முன்பே கசிந்தது, பல பயனுள்ள திறன்களை வழங்கக்கூடும்
  10. ஃபிஃபா உலகக் கோப்பைக்காக மெட்டா செயலிகளில் புதிய கால்பந்து அம்சங்கள் அறிமுகம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.