Vodafone Idea (Vi) நிறுவனம் தங்களோட 5G சேவையை மேலும் 23 புதிய இந்திய நகரங்களுக்கு விரிவாக்கம் செஞ்சிருக்காங்க.
Photo Credit: Vi
ரூ. 299 முதல் தொடங்கும் திட்டங்களில் வரம்பற்ற 5G தரவை Vi வழங்குகிறது
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில 5G சேவைக்கான போட்டி எப்பவும் சூடு பிடிச்சுக்கிட்டே இருக்கும். இந்த நிலையில, Vodafone Idea (Vi) நிறுவனம் தங்களோட 5G சேவையை மேலும் 23 புதிய இந்திய நகரங்களுக்கு விரிவாக்கம் செஞ்சிருக்காங்க! இது Vi வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய சந்தோஷ செய்திதான். இனி இந்த நகரங்கள்ல இருக்குறவங்க அதிவேக 5G சேவையை அனுபவிக்கலாம். எந்தெந்த நகரங்கள், என்னென்ன பலன்கள்னு டீட்டெய்லா பார்ப்போம்.Vi 5G: புதிதாக 23 நகரங்களில் விரிவாக்கம் - நகரங்களின் பட்டியல்!
Vi நிறுவனம் தங்களோட 5G சேவையை மேலும் 23 நகரங்களுக்கு கொண்டு வந்திருக்கு. இதன் மூலம், Vi-ன் 5G சேவை கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கை கணிசமா உயர்ந்திருக்கு. புதிதாக 5G சேவை கிடைக்கும் நகரங்களின் பட்டியல் இதோ:
● குஜராத்: அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா
● உத்தரப் பிரதேசம்: ஆக்ரா, லக்னோ, மீரட்
● மகாராஷ்டிரா: அவுரங்காபாத், நாக்பூர், நாசிக், புனே
● கேரளா: கோழிக்கோடு, கொச்சின், மலப்புரம், திருவனந்தபுரம்
● உத்தராகண்ட்: டேராடூன்
● மத்தியப் பிரதேசம்: இந்தூர்
● ராஜஸ்தான்: ஜெய்ப்பூர்
● மேற்கு வங்காளம்: கொல்கத்தா, சிலிகுரி
● தமிழ்நாடு: மதுரை
● ஹரியானா: சோனிபட்
● ஆந்திரப் பிரதேசம்: விசாகப்பட்டினம்
இந்த விரிவாக்கம் மூலம், Vi-ன் 5G சேவை இந்தியாவின் 17 முக்கிய வட்டாரங்களில் (priority circles) இன்னும் அதிகமான நகரங்களை சென்றடையும்.
Vi-ன் இந்த 5G சேவை விரிவாக்கம் வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய பலன்களை கொடுக்குது:
● பரந்த கவரேஜ்: 5G சேவை இப்போ நிறைய நகரங்கள்ல கிடைக்கும்கறதுனால, அதிகமான Vi வாடிக்கையாளர்கள் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும்.
● அன்லிமிடெட் 5G டேட்டா: ரூ. 299-ல் தொடங்கும் பிளான்களில் அன்லிமிடெட் 5G டேட்டாவை Vi வழங்குகிறது. இது 5G சேவையை இன்னும் மலிவானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுது.
● மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் பெர்ஃபார்மன்ஸ்: Vi நிறுவனம் AI-backed Self-Organising Networks (SON) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துது. நோக்கியா, எரிக்சன், சாம்சங் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் நெட்வொர்க்கை மேம்படுத்தி, 4G மற்றும் 5G இடையே ஒரு சீரான இணைப்பை உறுதி செய்யுது. இதனால, யூசர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அனுபவம் கிடைக்கும்.
● சிறந்த யூசர் அனுபவம்: 5G சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் பயனர்கள், இந்த நகரங்கள்ல Vi-ன் 5G நெட்வொர்க்கில் இணைந்து, வேகமான ஸ்பீட் மற்றும் சிறந்த கனெக்டிவிட்டி அனுபவிக்க முடியும்.
Vi நிறுவனம் தங்களோட 5G சேவையை மக்களுக்கு இன்னும் பரவலாக்கும் முயற்சியில தொடர்ந்து ஈடுபட்டு வராங்க. இந்த 23 நகரங்கள்ல இப்போ 5G சேவை கிடைக்கும்கறதுனால, வேலை, பொழுதுபோக்கு, ஆன்லைன் செயல்பாடுகள் எல்லாமே இனி இன்னும் வேகமா நடக்கும்.
Vi-ன் இந்த 5G விரிவாக்கம், இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு முக்கிய நகர்வு. மேம்படுத்தப்பட்ட வேகம் மற்றும் சீரான இணைப்பு உறுதி. இனி இந்த நகரங்களில் உள்ள Vi வாடிக்கையாளர்கள் அதிவேக 5G சேவையின் பலன்களை அனுபவிக்கலாம்!
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak