சூப்பர் ஆபரில் வோடபோன் Vi REDX போஸ்ட்பெய்ட் திட்டம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 30 ஜூலை 2024 16:21 IST
ஹைலைட்ஸ்
  • வோடபோன் அறிமுகப்படுத்திய REDX திட்டத்தின் விலை 1201 ரூபாய்
  • OTT, Swiggy உட்பட பல வசதிகளுக்கான சந்தாவும் அடங்கி உள்ளது
  • Vi RedX திட்டமானது ஆறு மாத Swiggy One மெம்பர்ஷிப்பையும் வழங்குகிறது

Photo Credit: Reuters

Vodafone Idea (Vi) நிறுவனம் புதிதாக  REDX என்ற பெயரில் புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.1,201 விலையில் பல்வேறு  OTT தளத்திற்கான சந்தா, Swiggy சந்தா மற்றும் கேஸ்பேக் ஆகிய பல்வேறு சலுகைகள் உள்ளன. இந்த திட்டம் 1 மாதத்திற்கான வேலிடிட்டியை வழங்குகிறது.  சமீபத்தில் நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களை கணிசமாக அதிகரித்திருந்தன. வோடாபோன், ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் வோடாபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

Vodafone Idea (Vi) நிறுவனம் REDX போஸ்ட்பெயிடு திட்டத்தில் Amazon Prime, Disney+ Hotstar, Sony Liv மற்றும் Sun NXT போன்ற ஐந்து OTT சந்தாவை இலவசமாக பெற முடியும். மொபைல் டிவி வசதியும் வருகிறது. இது தவிர ஆறு மாதங்களுக்கு கூடுதல் கட்டணமின்றி Swiggy One மெம்பர்ஷிப் கிடைக்கிறது. சர்வதேச அழைப்புகளுக்கு  ஏழு நாள் ரோமிங் இலவசமாக கிடைக்கும். Vi RedX போஸ்ட்பெய்ட் திட்ட பயனர்கள் வருடத்திற்கு ஒருமுறை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் ஓய்வறைகளை சலுகை விலையில் புக் செய்யலாம். விமான டிக்கெட் முன்பதிவுகளின் போது EaseMyTrip தள்ளுபடிகளை பெற முடியும். வாடிக்கையாளர்கள் நார்டன் மொபைல் பாதுகாப்பு சேவைகளையும் 12 மாதங்களுக்கு இலவசமாக அனுபவிக்க முடியும். 

REDX போஸ்ட்பெய்ட் திட்டத்தில் எவ்வளவு அழைப்புகளை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம், அதாவது வரம்பற்ற அழைப்புகள் என்ற அம்சம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதோடு, வரம்பற்ற தரவு அணுகலும் உள்ளது. இலவசமாக மூவாயிரம் எஸ்எம்எஸ் அனுப்பலாம். ஆனால் இந்த திட்டத்தில் ஒரு சிக்கலும் இருக்கிறது இந்தத் திட்டத்தை தேர்வு செய்த 180 நாட்களுக்கு முன் மூட விரும்பினால் 3000 ரூபாய் செலுத்த வேண்டும். 180 நாட்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை மூடினால், எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

REDX திட்டத்தில் Disney + Hotstar, SonyLIV Premium, SunNXT போன்ற தளங்களுக்கு சந்தா இலவசம். இதில் Disney Plus Hotstar மற்றும் SonyLIV சந்தா 1 வருடம் வரையிலும், மற்றவை 6 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கும். ஏற்கனவே REDX போஸ்ட்பெய்ட் திட்டம் 1101 ரூபாய் என்ற விலையில் இருந்த திட்டம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக கூடுதல் அம்சங்களுடன் ரூ.1201 திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு லாபம் கொடுக்கும் திட்டம் இது.
 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: REDX, Vi REDX, OTT, Swiggy

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. A18 சிப் மற்றும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் வசதியுடன் கூடிய ஆப்பிளின் அடிப்படை ஐபேட் 2026-ன் முதல் பாதியில் வெளியாக வாய்ப்பு
  2. 50-மெகாபிக்சல் கேமராவுடன் ரியல்மி 16 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்: பிளிப்கார்ட் வழியாக விற்பனை
  3. விவோ V70 FE இந்திய வருகை உறுதி: 200 மெகாபிக்சல் கேமரா இடம்பெறுவது உறுதியானது
  4. விவோ X300 அல்ட்ரா மற்றும் ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா விலை: ஷாவோமி 17 அல்ட்ராவை விட விலை அதிகமாக இருக்கலாம்
  5. ஆண்ட்ராய்டின் 24 மணிநேரக் காத்திருப்பினைத் தவிர்த்து, மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-Party Apps) நிறுவுவது எப்படி?
  6. 9,000mAh பேட்டரி, 50-மெகாபிக்சல் கேமராவுடன் போக்கோ X8 புரோ தொடர் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை மற்றும் சலுகைகளை இங்கே காணலாம்
  7. ஒன்பிளஸ் 15T: அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  8. இந்த ஆண்டின் இறுதியில் கேலக்ஸி S26 சீரிஸில் ஏர் டிராப் (AirDrop) வசதியை அறிமுகம் செய்ய சாம்சங் திட்டம்
  9. விவோ Y21 5G மற்றும் விவோ Y11 5G: சர்வதேச அறிமுகத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய விலை மற்றும் நிறங்கள் குறித்த தகவல்
  10. அலெக்சா மற்றும் AI அம்சங்களுடன் கூடிய புதிய ஸ்மார்ட்போனை அமேசான் உருவாக்கி வருகிறது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.