இந்தியாவின் தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) புதிய வரைமுறைகளின்படி டாடா ஸ்கை நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களே தங்களுக்கு வேண்டிய சேனல்களை தேர்வு செய்து நிர்ணயிக்கும் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி அந்நிறுவனத்தின் வலைதளத்திலோ, போன் செயலியிலோ அல்லது அருகில் உள்ள டாடா ஸ்கை டீலரிடம் அணுகி இந்த புதிய திட்டத்தை குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக ஓரு பிளானை தேர்ந்தேடுக்க தேவையில்லை. அதற்கு பதிலாக விருப்பமுள்ள 100 எஸ்டி சேனல்களை தேர்வு செய்துகொண்டு அதற்கான பணத்தை இன்று முதல் செலுத்தலாம்.
டிடிஎச் ஆப்ரேட்டர்களான ஏர்டேல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி ட்ராய்-யின் புதிய திட்டங்களை பொருத்து புதிய பிளான்களை தற்போது வெளியிட்டுள்ளது.டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஓவ்வொரு சேனல்களுக்கு எதிராக அதன் விலை பட்டியலையும் குறிப்பிட்டுள்ளது. பிதிவு செய்யப்பட்டுள்ள போன் எண்ணை பகிர்ந்து வேண்டிய சேனல்களை தேர்வு செய்துகொள்ள முடியும்.
வரும் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய கண்டனங்களுடன் பேக்குகளை தேர்வு செய்ய முடியும். இது குறித்து டாடா ஸ்கை தலைமை அதிகாரி மற்றும் நிறுவனரான ஹாரித் நாக்பால் ‘நாங்கள் ட்ராய் அமைப்பு கூறிய அனைத்து விதிகளின் கீழே செயல்படுகிறோம். இந்த புதிய பிளான்களை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தையோ, டாடா ஸ்கை மொபையில் ஆப்பையோ அல்லது அருகில் இருக்கும் டாடா ஸ்கை டிலர்களை அணுகியோ இந்த புதிய சேவை பற்றிய கூடுதல் தகவல்களை பெற முடியும்' என தெரிவித்தார்.
ட்ராய் மேற்கொண்ட புதிய மாற்றத்தை தொடர்ந்து பல டிடிஎச் நிறுவனங்கள் தங்களது சேவை திட்டங்களில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்