டாடா ஸ்கை தற்போது அதன் எஸ்டி செட்-டாப் பாக்ஸின் விலையில் அதன் எச்டி செட்-டாப் பாக்ஸை வழங்கி வருகிறது.
டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள் அதன் எச்டி செட்-டாப் பாக்ஸை ‘சிறப்பு சலுகை’-யின் கீழ் பெறலாம்
டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸின் விலை ரூ. 100 தள்ளுபடி செய்யப்படுள்ளது. இந்த சமீபத்திய விலை வீழ்ச்சி தற்போது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நேரலையில் இருக்கும். இது ‘சிறப்பு சலுகையின்' கீழ் வருகிறது. கடந்த மாதத்தின் பிற்பகுதியில், டாடா ஸ்கை அதன் எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ் மாடல்களின் விலையை ரூ. 300 வரை உயர்த்தியது. அந்த மாற்றம் டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,499 ஆகவும், எஸ்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,399 ஆகவும் விற்கப்படுகிறது. டாடா ஸ்கைக்கு கூடுதலாக, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, தற்போது எச்டி சேனல்களுக்கு வாடிக்கையாளர்களை நகர்த்தும் நோக்கில், அதன் எச்டி செட்-டாப் பாக்ஸில் தள்ளுபடி அளிக்கிறது.
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு பட்டியலின்படி, டாடா ஸ்கை எச்டி செட்-டாப் பாக்ஸ் சிறப்பு சலுகையின் கீழ் ரூ. 1,399 விலைக் குறையீட்டைக் கொண்டுள்ளது. இது டிடிஎச் ஆபரேட்டர் வழங்கிய எஸ்டி செட்-டாப் பாக்ஸின் விலைக் குறிக்கு இணையானதாக இருக்கிறது.
நீண்ட காலமாக வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை கிடைக்கும் என்பது தெளிவாக இல்லை. மேலும், நீங்கள் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளரிடமிருந்து செட்-டாப் பாக்ஸ்களை பெறுகிறீர்கள் என்றால் விலையில் சில வேறுபாடுகளைக் காணலாம்.
ட்ரீம் டிடிஎச் மன்றங்களில் ஒரு பயனரால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை, டாடா ஸ்கை எச்டி இணைப்புகளின் எண்ணிக்கையை விரிவாக்க உதவும். ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டிஷ் டிவி உள்ளிட்ட சந்தையில் உள்ள மற்ற ப்ளேயர்களும் எச்டி அனுபவத்தை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க இதே போன்ற சலுகைகளை வழங்குகிறார்கள். ஒரு ஒப்பீட்டிற்கு, ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,300-க்கு வழங்குகிறது. மறுபுறம், டிஷ் டிவி, ஒரு மாத சந்தா, வாழ்நாள் உத்தரவாதம் மற்றும் தேந்தெடுக்கப்பட்ட பிராண்டுகளுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள கூப்பன்களுடன் எச்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,690-க்கு வழங்குகிறது.
கடந்த மாதத்தின் பிற்பகுதியில், டாடா ஸ்கை அதன் எஸ்டி மற்றும் எச்டி செட்-டாப் பாக்ஸ்களின் விலையை அதிகரித்தது. இந்த ஆப்பரேட்டர், முன்பு அதன் எஸ்டி செட்-டாப் பாக்ஸை ரூ. 1,099 மற்றும் எச்டி செட்-டாப் பாக்ஸ் ரூ. 1,299 விலையையில் இருந்து முறையே ரூ. 1,399 மற்றும் ரூ. 1,499-யாக உயர்த்தியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Hogwarts Legacy Has Sold 40 Million Copies, Warner Bros. Games Announces
Infinix Xpad Edge Launched With 13.2-Inch Display, 8,000mAh Battery: Price, Specifications