ரிலையன்ஸ் ஜியோவின் Netflix ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிர்ச்சி

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 2 செப்டம்பர் 2024 12:35 IST
ஹைலைட்ஸ்
  • வரம்பற்ற கால் அழைப்புகளை தருகிறது
  • 3 ஜிபி வரை அதிவேக தினசரி டேட்டா கிடைக்கிறது
  • 84 நாட்கள் செல்லுபடியாகும் என Reliance Jio அறிவிப்பு

Reliance Jio Netflix prepaid plans come with 84 days validity

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Reliance Jio ரீசார்ஜ் திட்டம் பற்றி தான்.

ரிலையன்ஸ் ஜியோ இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாக்களுடன் வரும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில்

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் கட்டணங்களை உயர்த்திய நிலையில் ஜியோவும் அதே பாணியை கையாள்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இரண்டு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களிலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான பலன்களை வழங்குவதோடு Netflix மற்றும் OTT இலவச சந்தாவையும் நிறுவனம் வழங்குகிறது. ஜியோவின் திருத்தப்பட்ட சலுகைகள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஜியோவின் போட்டியாளர்களான வோடபோன் ஐடியா (Vi) மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை ஒரே நேரத்தில் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்தன. இப்போது ஜியோ

அறிமுகப்படுத்தியுள்ள இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாக்களுடன் கூடிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாக்களுடன் கூடிய ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் இப்போது ரூ. 1,299 மற்றும் ரூ. 1,799 என்கிற விலையில் உள்ளது. இதற்கு முன இவை ரூ. 1,099 மற்றும் முறையேரூ. 1,299, ரூ. 1,499 என்கிற விலையில் இருந்தன. ரூ. 1,799 திட்டம் நெட்ஃபிக்ஸ் அடிப்படை திட்டத்துடன் வருகிறது.

ஜியோவின் ரூ. 1,299 ப்ரீபெய்ட் திட்டமானது ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் ஒரு நேரத்தில் ஒரு சாதனம் மூலம் மட்டுமே Netflix ஓபன் செய்ய முடியும். மிக உயர்ந்த தரமான வீடியோ ஸ்ட்ரீமிங் 480p என்கிற அளவில் மட்டுமே கிடைக்கும். இதற்கிடையில் Netflix அடிப்படை திட்டம் பயனர்கள் தொலைபேசி, டேப்லெட், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் போன்ற எந்த சாதனத்திற்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தை ஓபன் செய்ய அனுமதிக்கிறது. இந்த ரூ. 1,799 திட்டம் மூலம் 720p வரை தரமான வீடியோக்களை பார்க்கலாம். வீடியோ தெளிவாக இருக்கும்.

நெட்ஃபிக்ஸ் சந்தாக்களுடன் இரண்டு ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களும் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஒவ்வொரு ரீசார்ஜிலும், வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ் சந்தாக்களைப் பெறுவார்கள் ஜியோ நிறுவனம் சொல்கிறது. மேலும் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற 5G இணைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும் இந்த திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள வரம்பற்ற 5G இணைப்பு பயனரின் பகுதியில் 5G கிடைப்பதைப் பொறுத்தது மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ. 1,299 மற்றும் ரூ. 1,799 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் முறையே 2ஜிபி மற்றும் 3ஜிபி தினசரி அதிவேக டேட்டாவை தருவதாக கூறுகின்றன. இந்த வரம்பிற்குப் பிறகு வரம்பற்ற டேட்டாவை 64Kbps வேகத்தில் பயன்படுத்தலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Jio prepaid plans, Reliance Jio, Netflix
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Unpacked 2025: Z Flip 7 வந்துருச்சு! ₹1.1 லட்சத்துல பெரிய கவர் ஸ்க்ரீன், வேகமான சிப்செட்
  2. அறிமுகமானது Samsung Galaxy Z Fold 7: 1TB ஸ்டோரேஜ், பிரம்மாண்ட டிஸ்ப்ளே - ஜூலை 12 வரை சிறப்பு ப்ரீ-ஆர்டர்!
  3. Amazon Prime Day 2025: Samsung Galaxy Buds 3 Pro-வுக்கு ₹9,000 தள்ளுபடி! வெறும் ₹10,999-க்கு வாங்க வாய்ப்பு!
  4. Amazon Prime Day 2025: iQOO போன்களுக்கு அதிரடி தள்ளுபடி! ₹52,999-க்கு iQOO 13
  5. அதிர்ச்சி! Vivo X Fold 5 விலை ₹1.5 லட்சம்! X200 FE-ல் 6500mAh பேட்டரி - லீக் தகவல்கள் இதோ!
  6. Apple-ன் அடுத்த மாஸ்டர்பீஸ்: iPhone 17 Pro Max-ல் பேட்டரி புரட்சி! நீண்ட நேரம் யூஸ் பண்ணலாமா?
  7. Honor X9c 5G: ஜூலை 7-ல் இந்திய லான்ச்! 108MP OIS கேமரா, 6600mAh பேட்டரியுடன் மிரட்ட வருகிறது!
  8. Amazon Prime Day Sale: எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 65% வரை ஆஃபர்! பேங்க் சலுகைகளுடன் அசத்துகிறது!
  9. నథింగ్ ఫోన్ 3 స్మార్ట్‌ఫోన్ Android 15 ఆధారంగా రూపొందించిన నథింగ్ OS 3.5 పై రన్ అవుతుంది
  10. Nothing Headphone 1: 80 மணி நேர பேட்டரி லைஃப், டிரான்ஸ்பரண்ட் டிசைனுடன் இந்தியாவில் லான்ச்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.