ஜியோ-வின் அதிரடி ஆஃபர்களை ஓரங்கட்ட ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய ரீசார்ஜ் பேக்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
ப்ரீபெய்டு பயனர்களுக்கு 449 ரூபாயில், ஒரு புதிய ரிசார்ஜ் பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். இந்த பேக்-ஐ ரீசார்ஜ் செய்வதன் மூலம் மொத்தம் 140 ஜிபி இன்டர்நெட்டை, பயனர்கள் 70 நாளைக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே நேரத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி மட்டுமே இதன் மூலம் உபயோகப்படுத்த முடியும். இது 3ஜி மற்றும் 4ஜி ஸ்பீடுகளில் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் பேக் மூலம் அன்லிமிடெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் செய்ய முடியும். 100 உள்ளூர் குறுஞ்செய்திகளும் இந்த பேக் மூலம் கிடைக்கப் பெறுகிறது.
ஜியோ நிறுவனம், 448 ரூபாய்க்கு ஒரு ரிசார்ஜ் பேக்-ஐ கொடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 1.4 ஜிபி என்கின்ற வீதத்தில் 82 நாட்களுக்கு 3ஜி அல்லது 4ஜி-ஐ பெற முடியும். இதில் அன்லிமிடெட் அழைப்பு வசதியுடன், குறுஞ்செய்தி வசதியும் இருக்கிறது.
இந்த ஜியோ-வின் பிரபலமான ரிசார்ஜுக்குத் தான் ஏர்டெல் தற்போது போட்டியாக ஒரு பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, தொலைதொடர்பு நிறுவனங்களில் அதுவரை பின்பற்றப்பட்ட வந்த அனைத்து நடைமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. அதனால், போட்டி நிறுவனங்களும் சந்தையில் நீடித்து நிற்க பல அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசிய வண்ணம் இருக்கின்றன. ஏர்டெல்லின் தற்போதைய செயலும் அப்படிப்பட்டவையாகவே இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்