Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது

Airtel ப்ரீபெய்ட் பயனர்கள் இப்போது ஆறு மாதங்களுக்கு Apple Music சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாகப் பெறலாம்

Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது

Photo Credit: Apple

இந்த சலுகை முன்பு ஏர்டெல்லின் வைஃபை மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது

ஹைலைட்ஸ்
  • Airtel ப்ரீபெய்ட்: 6 மாதங்கள் இலவச Apple Music சப்ஸ்கிரிப்ஷன்
  • Airtel Thanks ஆப் வழியாக இந்த சலுகையை பெறலாம்
  • ஆட்-ஃப்ரீ பாடல்கள், ஆஃப்லைன் டவுன்லோட்கள், ஹை-குவாலிட்டி ஆடியோ
விளம்பரம்

தக்கவைச்சுக்கறதுக்காகவும், புதுசா பலரை ஈர்க்கறதுக்காகவும், நிறுவனங்கள் போட்டி போட்டுக்கிட்டு புதுசு புதுசா சலுகைகளை அறிவிச்சுக்கிட்டு இருக்காங்க. அந்த வகையில, இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான Airtel, இப்போ தன்னுடைய ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், Apple Music தளத்துல இருக்கிற கோடிக்கணக்கான பாடல்களை ஆறு மாதங்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லாம இலவசமா கேட்டு ரசிக்கலாம். இந்த அறிவிப்பு, ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள், குறிப்பாகப் பாடல்களை ரசிப்பவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருக்கு. இப்போதைய டெலிகாம் நிறுவனங்களோட போட்டி, வெறும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை மட்டும் மையமா வச்சு இல்லாம, டிஜிட்டல் சேவைகளையும் சேர்த்து வழங்குறதுல இருக்கு. Jio, Airtel, Vodafone Idea என எல்லா நிறுவனங்களும் Netflix, Disney+ Hotstar, Amazon Prime Video போன்ற OTT சேவைகளை தங்களோட ரீசார்ஜ் திட்டங்களோடு இலவசமா சேர்த்து கொடுக்கறாங்க.


இதேபோல, மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகள்லயும் ஒரு பெரிய போட்டி இருக்கு. Apple Music-ஐ இலவசமா கொடுக்குறது மூலமா, Airtel மற்ற நிறுவனங்களை விட ஒரு படி மேல போயிருக்கு. அதுமட்டுமில்லாம, Spotify, YouTube Music, Amazon Music போன்ற தளங்கள்ல பாட்டு கேட்கிற பயனர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. குறிப்பாக, பட்ஜெட் ரீசார்ஜ் பண்றவங்க, மாசம் ₹119 கொடுத்து Apple Music சப்ஸ்கிரைப் பண்ண மாட்டாங்க. இப்போ ஆறு மாசம் இலவசமா கிடைக்குறது, ஒரு பெரிய சலுகை.


யாரெல்லாம் இந்த சலுகைக்கு தகுதியானவங்க? எப்படி இதை ஆக்டிவேட் செய்வது?
இந்த சலுகை அனைத்து Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா இல்லையான்னு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கலை. ஆனா, பல பயனர்கள் தங்களோட Airtel Thanks ஆப்ல இந்த சலுகைக்கான பேனரை பார்க்க முடிஞ்சிருக்கு. அதனால, நீங்களும் ஒரு Airtel ப்ரீபெய்ட் யூசரா இருந்தா, உடனே Airtel Thanks ஆப்பை ஓபன் பண்ணி செக் பண்ணி பாருங்க. உங்களுக்கு இந்த ஆஃபர் வந்திருக்கலாம். இந்த ஆஃபர் எந்த ஒரு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்துடனும் இணைக்கப்படவில்லை. சாதாரண 5G டேட்டா பிளான் இல்லாதவங்களுக்கும் இந்த ஆஃபர் வந்திருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு.


இந்த சலுகையை ஆக்டிவேட் பண்றது ரொம்ப சுலபம். உங்களுடைய Airtel Thanks ஆப்ல, ஆஃபர் பேனர் இருந்தால், அதை கிளிக் செய்து, உங்களுடைய Apple ID-யை பயன்படுத்தி லாகின் பண்ணனும். அவ்வளவுதான்! ஆறு மாதங்களுக்கு நீங்க இலவசமா பாடல்களை ரசிக்க ஆரம்பிக்கலாம். ஒருவேளை உங்ககிட்ட Apple ID இல்லனா, ஒண்ணு கிரியேட் பண்ணிக்கணும்.

சப்ஸ்கிரிப்ஷன் முடிஞ்சதும் என்ன ஆகும்?

ஆறு மாச இலவச சப்ஸ்கிரிப்ஷன் முடிஞ்சதும், இந்த சேவை தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போ மாசம் ₹119 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் வசூலிக்கப்படக்கூடாதுனு நினைச்சா, ஆறு மாசத்துக்குள்ள நீங்க இந்த சேவையை ரத்து செஞ்சுக்கலாம்.


மொத்தத்துல, இந்த Apple Music ஆஃபர், Airtel-ஐ ஒரு பொழுதுபோக்கு தளமாக மாற்றுவதற்கான பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுது. ஏற்கனவே, Perplexity AI-க்கும் இலவச அணுகலை கொடுத்து, Airtel ஒரு புது பாதையில் பயணிக்க ஆரம்பிச்சிருக்கு. இதுபோல, பல டிஜிட்டல் சேவைகளை சேர்த்து கொடுக்குறது, வாடிக்கையாளர்களைத் தங்கள் நிறுவனத்துடனே நிலைநிறுத்திக்கறதுக்கு ஒரு நல்ல வழி.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  2. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  3. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  4. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  5. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
  6. Amazon Great Indian Festival 2025: லேப்டாப் மற்றும் டேப்லெட் இரண்டும் ஒரே சாதனத்தில்!
  7. Amazon Great Indian Festival 2025: உங்கள் கனவு வீட்டை குறைந்த பட்ஜெட்டில் அமைக்க சரியான வாய்ப்பு!
  8. Amazon Great Indian Festival 2025: Noise Cancellation கொண்ட Sony, Bose, Sennheiser ஹெட்ஃபோன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி
  9. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  10. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »