ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான ஜியோ மெம்பர்ஷிப்-ஐ இலவசமாக நீட்டித்து வழங்கியுள்ளது. இந்த தொலைதொடர்பு நிறுவனம், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இதை தெரிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு என்பது முன்னதாகவே ஜியோ மெம்பர்ஷிப் வைத்திருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்த மெம்பர்ஷிப் என்பது ஜியோ செயலியின் துணை செயலிகளான, ஜியோ மியூசிக், ஜியோ டிவி, பொன்றவற்றை இலவசமாக பயன்படுத்த உதவும். இந்த நிறுவனம், இலவசமாக தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையை வழங்குவது, இது முதன்முறை அல்ல. முன்னதாகவே சென்ற வருடமும், தன் வாடிக்கையாளர்களுக்கு இலவச மெம்பர்ஷிப்-ஐ நீட்டித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜியோவின் நீட்டிக்கப்பட்ட மெம்பர்ஷிப் உங்களுக்கும் கிடைத்திருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள, உங்கள் மொபைல் போனிலிருந்து, பதிவு செய்யப்பட்ட "மை ஜியோ"(My Jio) செயலியை திறந்து, அதில் மை ப்ளான்ஸ்(My Plans) பகுதியில் சென்று பார்க்க வேண்டும். ஒருவேளை இந்த இலவச சலுகை உங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால், அங்கு அதற்கான அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த அறிவிப்பில்,'ஒரு வருடத்திற்கான இலவச ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப்க்கான வேண்டுகோள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி ஒரு வருடத்திற்கான அனைத்து ஜியோ ப்ரைமின் சலுகைகளை, நீங்கள் இலவசமாக உபயோகித்துக்கொள்ளலாம். நன்றி" என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த புதிய அறிவிப்பின் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள், தங்களுடைய பழைய மெம்பர்ஷிப்பை இழந்து, மேலும் ஒரு வருடத்திற்கான மெம்பர்ஷிப்பை இலவசமாக பெறுவர். இதற்கு எந்த விதமான பணமும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, இந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், இந்த ஒரு வருட மெம்பர்ஷிப்பை 99 ரூபாய் வழங்கி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கூறியது போல ஜியோ மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கியுள்ள இந்த நிறுவனம், சென்ற முறைபோன்று இல்லாமல், இந்த முறை தானாகவே தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி பதிவாகும் வகையில் செய்துள்ளது. சென்ற முறை, இந்த மாதிரி இலவச மெம்பர்ஷிப்பை வழக்கியபோது, வாடிக்கையாளர்கள், இதற்காக மை ஜியோ செயலியில் பதிவு செய்யவேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மெம்பர்ஷிப் வாயிலாக ஜியோ செயலியின் துணை செயலிகளான, ஜியோ மியூசிக், ஜியோ டிவி, ஜியோ சினிமா பொன்றவற்றை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் ஜியோ நிறுவனம் வழங்கும் பல சலுகைகளையும் மற்றும் வைச்சர்களையும் பெற இந்த மெம்பர்ஷிப் உதவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்