தொலைதொடர்பு நிறுவனங்களுக்குள் போட்டி? - யார் ராஜா!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 22 பிப்ரவரி 2019 10:03 IST

சமீப காலமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பக்கம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ஈர்த்து வரும் நிலையில் இந்திய தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணைம் ட்ராய், ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அந்தத் தகவல்படி கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிகமாக தன்வசப்படுத்தியதாகவும், மற்ற முன்னனி ஆப்ரேட்டர்களான ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற நிறுவனங்கள் தொடர்சியாக வாடிக்கையாளர்களை இழந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

டிசம்பரில் ஜியோ நிறுவனம், சுமார் 85.6 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைத்துள்ளதாகவும், இதனால் அந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.01 கோடியாக உயர்ந்ததுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பர் 2018 போது 117.17 கோடி முதல் டிசம்பர் மாதம் 2018 க்குள்  117.6 கோடி வரை உயர்ந்துள்ளது. இதன் 0.36 சதவிகிதம் அதிகமாகும். மேலும் நகரங்களிளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது' என இந்திய தொலைதொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிகபடியான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கொண்ட நிறுவனமான வோடபோன்-ஐடியா சமீபத்தில் 23.32 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும், ஏர்டெல் நிறுவனமும் தனது 15.01 லட்ச வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘கடந்த டிசம்பர் மாதம் சுமார் 4.76 மில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்-ஐ போர்டபிலிட்டிக்காக கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்' எனவும் ட்ராய் அறிக்கை கூறுகிறிது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Reliance Jio, Airtel, Vodafone Idea
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  2. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  3. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  5. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  6. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  7. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  8. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  9. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  10. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.