அமேசான் நிறுவனம் சார்பாக ‘தி கிரேட் இந்தியன் சேல்' இம்மாதம் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிக தள்ளுபடியில், குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது அமேசான். இந்த சேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தனது சார்பாக ‘குடியரசு தின சேல்' என்ற பெயரில் வரும் ஜனவரி 20 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு விற்பனையை நடத்த முடிவெடுத்துள்ளது. ஃப்ளிப்கார்டின் இந்த தள்ளுபடி விற்பனையில் மொபையில் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், மடிக்கணினிகள் என பல பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும் இந்த ‘குடியரசு தின சேலில்' ரஷ் சேல் என்ற பெயரில் கூடுதலாக 26 சதவிகிதம் தள்ளுபடி (மதியம் 2 மணி முதல் 6 மணி வரை) கிடைக்கும். அத்துடன் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியாவின் க்ரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் எக்ஸ்சேஞ்சு அஃபர், வட்டியில்லா தவணைத் திட்டம் என பல சலுகைகள் இந்த சிறப்பு விற்பனை மூலம் கிடைக்கும்.
இந்த சேல்லுக்காக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பிரத்தேயகமாக ஓரு தனி மைக்ரோ இணையதளத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது. மேலும், ரூபாய் 1,450 க்கு வாங்குபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளூபடியும் 1,950 க்கு மேல் வாங்குபவர்களுக்கு 15 சதவிகிதம் தள்ளூபடியும் தர அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
வரும் ஜனவரி 20 முதல் 23 முதல் நடக்கும் நான்கு நாட்கள் நடைபெரும் அமேசான் சேலிலும் பல விதமான தள்ளுபடியும் கிடைக்கும். இரு தள்ளுபடி சேல்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ள காத்திருங்கள்...
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்