54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்!

54 நாட்களுக்கு, 2GB டேட்டா, வெறும் 198 ரூபாயில், புதிய திட்டங்களை அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல்!

பி.எஸ்.என்.எல்-லின் புதிய திட்டங்கள் அதிக டேட்டாவை வழங்கவுள்ளன

ஹைலைட்ஸ்
 • பி.எஸ்.என்.எல்-ல் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 2GB டேட்டா
 • 54 வேலிடிட்டி கொண்டது இந்த புதிய திட்டம்
 • 47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால் 1GB டேட்டா

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று அழைக்கப்படும் பி.எஸ்.என்.எல் தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவைகளை வழங்கவுள்ளது. இந்த புதிய அறிவிப்பில், முன்னதாக இருந்த திட்டங்களில், டேட்டா மற்றும் வேலிடிட்டி நாட்களைக் கூட்டியுள்ளது.

தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டேல், ஐடியா போன்ற நிறுவனங்களுடன் உள்ள போட்டியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இந்த திட்டங்களை அறிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். ரூபாய் 47-க்கும் மற்றும் ரூபாய் 198-க்கும் இருந்த திட்டங்கள் தான், தற்போது மாற்றத்தை பெற்றிருக்கும் அந்த திட்டங்கள். மேலும் சில பம்பர் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது இந்த நிறுவனம். அந்த புதிய திட்டங்கள், சலுகைகள் என்னென்ன?

மாற்றம் செய்யப்பட்ட திட்டங்களும், பம்பர் சலுகையும்!

முன்னதாக பி.எஸ்.என்.எல்-லில் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 1.5GB  டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா ப்ளான் 28 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால், தற்போது அறிவித்துள்ள திட்டத்தின்படி, நீங்கள் 198 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு ஒருநாளைக்கு 2GB என்ற அளவில், டேட்டா கிடைக்கும்.

மேலும் முன்னதாக 28 நாட்கள் என இருந்த இந்த ரீ-சார்ஜ்-ன் வேலிடிட்டியை, தற்போது 54 நாட்களாக உயர்த்தியுள்ளது இந்த நிறுவனம். இதன் மூலம், முதலில் மொத்த வேலிடிட்டி காலத்தில் 42GB டேட்டாவை வழங்கிக்கொண்டிருந்த இந்த திட்டம், இந்த புதிய அறிவிப்பால் தன் வேலிடிட்டி காலத்தில் மொத்தம் 108GB டேட்டாவை வழங்கவுள்ளது. வாடிக்கையாளர்கள் ,இந்த திட்டத்தின் வாயிலாக, முன்னதாக இருந்ததை விட இரட்டிப்பு டேட்டா அளவை பெறவுள்ளனர்.

தனது 47 ரூபாய்க்கு இருந்த திட்டத்திலும் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். இந்த திட்டத்தில் முன்னதாக 47 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், உங்களுக்கு அளவற்ற தொலைபேசி அழைப்புகளை பேசிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்த இந்த நிறுவனம், அந்த திட்டத்தின் வேலிடிட்டி அளவை 11 நாட்களாக வைத்திருந்தது. தற்போது, அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய அறிவிப்பில், அளவற்ற தொலைபேசி அழைப்புகளுடன், சேர்த்து 1GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 9 நாட்கள் என அறிவித்துள்ளது இந்த நிறுவனம். 1GB டேட்டாவை கூடுதலாக வழங்கியிருந்தாலும், இந்த திட்டத்திற்கான கால அளவை குறைத்திருக்கிறது பி.எஸ்.என்.எல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பம்பர் சலுகையையும் வழங்கியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக ஏப்ரல் 30 வரை ரீ-சார்ஜ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டாவை வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. தற்போது அந்த சலுகையை ஜூன் 30 வரை நீட்டித்து அளித்திருக்கிறது இந்த நிறுவனம். இதன்படி ஜூன் 30 வரை 186 ரூபாயிலிருந்து 1,699 ரூபாய் வரை நீங்கள் செய்யும் அனைத்து ரீ-சார்ஜ்களுக்கும் 2.21GB கூடுதல் டேட்டா கிடைக்கும்.

எனவே, பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களே, ரீ-சார்ஜ் செய்து, இந்த சலுகைகளை தவறாமல் பெற்றுக்கொள்ளுங்கள். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com