ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய போஸ்டுபெய்டு ப்ளானை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது. 299 ப்ளான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ப்ளானில், 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 31 ஜிபி டேட்டா, ஒரு நாளிற்கு 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடட் காலிங் ஆகியவை இடம் பெற்றுள்ளன
மேலும், இந்த ப்ளான் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அளிக்கப்பட உள்ளது என்று பி.எஸ்.என்.எல் அறிவித்துள்ளது. 299 ப்ளானில், மாத உபயோகத்தில் மீதமுள்ள டேட்டாவை அடுத்த மாதம் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது
ஜியோவின் 199 ப்ளான், வோடாஃபோனின் 299 ப்ளான் ஆகியவற்றுக்கு போட்டியாக இந்த புதிய போஸ்ட்பெய்டு ப்ளான் உள்ளது. பி.எஸ்.என்.எல் போஸ்டுபெய்டு ப்ளானில், 299 ரூபாயுடன் வரி சேர்த்து செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்