Photo Credit: BSNL
BSNL இந்தியாவில் உள்ள பயனர்களுக்கான ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்றில் விளம்பர சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் மூலம், ப்ரீபெய்ட் பயனர்கள் BSNL Selfcare ஆப் மூலம் பிரத்தியேகமாக ரீசார்ஜ் செய்யும் போது, திட்டத்தின் தற்போதைய பலன்களுடன் கூடுதலாக 3GB டேட்டாவைப் பெறலாம். இதனுடன் சமீபத்தில் இரண்டு புதிய சேவைகளை BSNL அறிமுகப்படுத்தியது: ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி மற்றும் நேரடியாக செயற்கைக்கோள் இணைப்பு மூலம் சிக்னல் ஏற்படுத்தும் வசதி இதில் அடங்கும்.
ப்ரீபெய்டு பயனர்கள் அதன் ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம். இது 84 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் உடன் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தினசரி நன்மைகளுடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கூடுதலாக 3ஜிபி டேட்டாவையும் பெறுவார்கள்.
ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் Zing மியூசிக் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலிக்கான சந்தாக்கள், தனிப்பட்ட ரிங் பேக் டோன், ஆஸ்ட்ரோடெல் மற்றும் கேம்ஆன் போன்ற பிற மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளையும் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கும் BSNL Selfcare ஆப் மூலம் பிரத்தியேகமாக ரீசார்ஜ் செய்தால் திட்டத்தின் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதே போன்ற பலன்களை ரூ. 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்திலும் பெறலாம். ஆனால் இது 30 நாட்கள் குறைக்கப்பட்ட வேலிடிட்டியுடன் வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராபர்ட் ரவி, BSNL மற்ற நிறுவனங்களை போல கட்டணத்தை உயர்த்தாது என்று சமீபத்தில் அறிவித்தார்.
ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களால் இந்தியாவில் வெளியிடப்பட்ட விலை உயர்வைத் தொடர்ந்து அது பெற்ற புதிய நுகர்வோரைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் அதன் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த உயர்வின் விளைவாக BSNL ஜூலை மாதத்தில் இந்தியாவில் 2.9 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றது. குறைந்த கட்டணங்கள் நுகர்வோர் நிறுவனங்கள் மாறுவதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் BSNL அதன் சந்தைப் பங்கை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஸ்பேம் பாதுகாப்பு, ஃபைபருக்கான வைஃபை ரோமிங் சேவ உட்பட சமீபத்தில் ஏழு சேவைகள் அறிவிக்கப்பட்டது. FTTH, எந்த நேர சிம் (ATM) கியோஸ்க்குகள் மற்றும் ஃபைபர் அடிப்படையிலான இன்ட்ராநெட் டிவி சேவை இதில் அடங்கும்.
இந்தியாவிற்கு அடுத்த தலைமுறை இணைப்பை அறிமுகப்படுத்த, அதன் 5G ரேடியோ அணுகல் நெட்வொர்க் (RAN) மற்றும் 3.6 GHz மற்றும் 700 MHz அதிர்வெண் அலைவரிசைகளில் கோர் நெட்வொர்க்கின் சோதனைகளை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக முடித்தது. 2025ஆம் ஆண்டின் பாதியில் 1,00,000 பிஎஸ்என்எல் 4G தளங்களை அமைக்க தொலைதொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் 5G வெளியீட்டை உறுதிப்படுத்துவதோடு, நாடு முழுவதும் உள்ள அதன் பயனர்களுக்கு பாதுகாப்பு, மலிவு விலை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஏழு புதிய சேவைகளையும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்