அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited - BSNL) இந்தியாவில் புதிய ரூ. 997 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்பு சலுகைகள் மற்றும் 180 நாட்கள் செல்லுபடி ஆகியவற்றை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளும் அடங்கும். ஏர்டெல்லின் ரூ. 998 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் வோடபோன் மற்றும் ஜியோவின் ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகியவற்றுடன் இந்த நீண்டகால செல்லுபடியாகும் திட்டம் பேட்டியிடும். ஜியோ திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் திட்டம் 180 நாட்களுக்கு இரட்டை செல்லுபடியை வழங்குகிறது.
புதிய பி.எஸ்.என்.எல் ரூ. 997 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி பேசும்போது, இது மும்பை மற்றும் டெல்லி வட்டங்களில் கூட (ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் FUP உடன்) ரோமிங் செய்வது உட்பட எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 3 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவும் அடங்கும். மேலும், FUP-ஐ அடைந்த பிறகு, வேகம் 80Kbps ஆகக் குறைக்கப்படும். கூடுதலாக, ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளைக் கொண்டுவருகிறது. இது 180 நாட்கள் செல்லுபடியாகும். இந்த பிஎஸ்என்எல் திட்டம் இரண்டு மாதங்களுக்கு பிஆர்பிடி பலன்களையும் (PRBT benefits) வழங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கிறது. மேலும், இந்த ரீசார்ஜ் நவம்பர் 10 நேற்று முதல் கிடைக்கத் தொடங்கியது. இந்த புதிய திட்டத்தை முதலில் தொலைத் தொடர்பு பேச்சு (Telecom Talk) கண்டறிந்தது.
போட்டிக்கு வருகையில், ஏர்டெல் ரூ. 998 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் அன்லிமிடெட் குரல் அழைப்பு, 28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ், மொத்த டேட்டா பலன்கலில் 12 ஜிபி மற்றும் 336 நாட்களுக்கு செல்லுபடியாகும். வோடபோன் ஐடியா அதன் ரூ. 999 திட்டத்தை வழங்குகிறது. ஆனால் 365 நாட்கள் செல்லுபடியாகும். ஜியோவின் ரூ. 999 திட்டம், 60 ஜிபி டேட்டா பலன், அன்லிமிடெட் ஜியோ-டு-ஜியோ அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது. மேலும், 90 நாட்கள் செல்லுபடியாகும். ஜியோ அல்லாத அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்