இந்தியாவில் Wi-Fi calling ஆதரவை அறிமுகப்படுத்திய முதல் தொலைத் தொடர்பு ஆபரேட்டராக ஏர்டெல் மாறியுள்ளது. பெயர் அதை தெளிவுபடுத்துவதால், Airtel Wi-Fi Calling ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான குரல் அழைப்பைப் போலவே வைஃபை நெட்வொர்க்கில் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும். மேலும், Airtel Wi-Fi Calling-க்கு தனி செயலி தேவையில்லை. மேலும், Wi-Fi Calling விருப்பத்தை இயக்குவதன் மூலம் அனைத்து இணக்கமான போன்களிலும் பயன்படுத்தலாம். தனது புதிய சேவையானது ஒரு சிறந்த வைஃபை நெட்வொர்க்கை வீட்டிற்குள் கிடைப்பதன் மூலம் சிறந்த அழைப்பு அனுபவத்தை வழங்கும் என்று ஏர்டெல் கூறுகிறது. Airtel Wi-Fi Calling பற்றி எல்லாவற்றையும் அறிய இங்கே படிக்கவும்.
Airtel Wi-Fi Calling தற்போது டெல்லி NCR-ல் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது மற்றும் Airtel Xstream Fiber home broadband உடன் இணக்கமானது. இருப்பினும், அனைத்து பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் ஹாட்ஸ்பாட்களுக்கும், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவைச் சேர்க்க மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதாக ஏர்டெல் கூறுகிறது.
போன்களைப் பொறுத்தவரை, Wi-Fi Calling அம்சத்தை ஆதரிக்கும் அனைத்து போன்களுக்கும் Airtel Wi-Fi Calling வழிவகுக்கும். ஆனால் இப்போது, பின்வரும் போன்கள் மட்டுமே ஏர்டெல்லின் புதிய சேவையுடன் இணக்கமாக உள்ளன:
பயனர்கள் தங்கள் போனின் Wi-Fi calling அம்சத்தை இயக்கி, Airtel Wi-Fi Calling-ஐப் பயன்படுத்தத் தொடங்க சமீபத்திய மென்பொருள் உருவாக்கத்திற்கு மேம்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் சிறந்த முடிவுகளுக்கு VoLTE-ஐ இயக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டேட்டா நுகர்வு பொறுத்தவரை, 5 நிமிட Wi-Fi calling, 5MB-க்கும் குறைவான டேட்டாவை பயன்படுத்தும். வைஃபை நெட்வொர்க் முடக்கப்பட்டால், நடந்துகொண்டிருக்கும் Wi-Fi calling தடையின்றி VoLTE-க்கு மாற்றப்படும்.
Airtel Wi-Fi Calling-ன் நன்மைகள் பற்றி பேசுகையில், பயனர்கள் புதிய சிம் வாங்கத் தேவையில்லை என்றும், வைஃபை நெட்வொர்க்குடன் எந்த இடத்திலிருந்தும் அழைப்பு அல்லது செய்தி அனுப்பலாம் என்றும் தொலைதொடர்பு ஆபரேட்டர் கூறுகிறார். மேலும், புதிய வைஃபை அடிப்படையிலான அழைப்பு சேவை VoLTE உடன் ஒப்பிடும்போது சிறந்த அழைப்பு அமைவு நேரம் மற்றும் ஆடியோ தரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. மேலும், பயனர்கள் புதிய திட்டத்தைத் தேர்வுசெய்யவோ அல்லது Airtel Wi-Fi calling சேவையைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. ஒரு Wi-Fi calling வழக்கமான அழைப்பைப் போலவே கருதப்படும், மேலும் பயனரின் தற்போதைய ரீசார்ஜ் அல்லது முதன்மை இருப்புக்கு எதிராக இது செல்லும்.
தெளிவாக இருக்க, மற்றொரு நபரிடமிருந்து Wi-Fi calling-ஐப் பெற தனது போனில் Wi-Fi calling-ஐ இயக்க receiver தேவையில்லை, மேலும் குறிப்பிட்ட நெட்வொர்க் தேவைகளும் இல்லை. ஒரு வழக்கமான அழைப்பைப் போலவே வேறு எந்த நெட்வொர்க்குக்கும் (2G / 3G / 4G / VoLTE / Wi-Fi) Airtel Wi-Fi call செய்யலாம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், அழைப்புத் திரையில் வைஃபை அழைப்பதற்கான தனிப்பட்ட சின்னத்தால் Wi-Fi calling அடையாளம் காணப்படும். ஆம், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரோமிங்கின் போதும் Wi-Fi calling-ஐ செய்யலாம், ஆனால் சர்வதேச அழைப்புக்கு அனுமதிக்கப்படாது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்