ஏர்டெல் நிறுவனம் தனது ரூபாய் 100 மற்றும் 500 க்கு செய்யப்படும் ரீசார்ஜ் பிளானை மறுபடியும் கொண்டு வந்துள்ளது. 28 நாட்கள் வரை செல்லுபடியாகும் இந்த பிளான் நாடு முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பொருந்துமா என்பது இன்னும் தெரியப்படவில்லை.
டெலிகாம் துறையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியா போன்ற போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் ஏர்டெல் இந்த பிளானை லாஞ்ச் செய்துள்ளது. மை ஏர்டல் ஆப்பில் காணப்படும் இந்த ரீசார்ஜ் திட்டம் ‘ப்ரீபெய்டு' பிரிவில் உள்ள ‘டாக் டைம்' செக்ஷனில் இருக்கிறது.
100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் 81.75 வரை டாக்டைம்மை 28 நாட்களுக்கு பெற முடியும். 500 ரூபாய் ரீசார்ஜுக்கு 420.73 ரூபாய் வரை டாக்டைம்மை பெற முடிகிறது. இதிலும் 28 நாட்கள் வரையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இலவச இன்கமிங் கால்கள் எப்போது வேண்டுமென்றாலும் பெற முடியும். மேலும் இந்த ரீசார்ஜ்களுடன் மொபைல் டேட்டாவோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை வரை மெசேஜ்களையோ இலவசமாக அளிப்பதாக ஏர்டெல் சார்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஏர்டெலின் நெடுநாள் ப்ரீபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருவோருக்கு ஏர்டெல் டிவி ஆப்பிற்கு ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்