ரூ.558 ப்ரீபெர்ட் ரீசார்ஜ் ப்ளானை திருத்தியது ஏர்டெல்...!

ரூ.558 ப்ரீபெர்ட் ரீசார்ஜ் ப்ளானை திருத்தியது ஏர்டெல்...!

இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும், ஏர்டெல் ரூ. 558 ப்ரீபெய்ட் ப்ளான் நேரலையில் உள்ளது

ஹைலைட்ஸ்
  • ஏர்டெலின் ரூ. 558 ப்ளான் Wynk மியூசிக் சந்தாவை இலவசமாக வழங்குகிறது
  • இந்த பேக் FASTag-ல் ரூ. 100 கேஷ்பேக்கையும் வழங்குகிறது
  • Airtel Thanks app, நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்யலாம்
விளம்பரம்

ஏர்டெல் தனது ரூ. 558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானின் செல்லுபடியை 26 நாட்கள் குறைத்துள்ளது. இப்போது, ​​ரூ. 558 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான், செல்லுபடியாகும் தன்மை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற அனைத்து பலன்களும் அப்படியே இருக்கின்றன. ஏர்டெல் சமீபத்தில் டெல்லி-NCRல் வைஃபை அழைப்பு சேவையையும் அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான குரல் அழைப்பைப் போலவே வைஃபை நெட்வொர்க்கில் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு தனி செயலி தேவையில்லை. மேலும், அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது வைஃபை அழைப்பு விருப்பத்தை enable செய்ய வேண்டும்.


ஏர்டெல் ரூ. 558 ப்ரீபெய்ட் ப்ளான் பலன்கள் (திருத்தப்பட்டவை)

ஏர்டெல் ரூ. 558 ப்ரீபெய்ட் ப்ளான், உண்மையிலேயே அன்லிமிடெட் குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்ட் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த பலன்களில் அடங்கும். செல்லுபடியாகும் தன்மை 82 நாட்களிலிருந்து 56 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது - இது 26 நாட்களின் அதிகமான குறைப்பு. ப்ளானின் கூடுதல் பலன்களில் ஷா அகாடமியில் (Shaw Academy) நான்கு வார இலவச பாடநெறி அடங்கும். இது பயனர்கள் புகைப்படம் எடுத்தல் முதல் இசை வரை எதையும் கற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. இந்த பலன்களின் செல்லுபடியாகும் தன்மை 28 நாட்கள் மட்டுமே. Zee5, HOOQ, 370+ Live TV சேனல்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து உள்ளடக்கத்தை வழங்கும் Wynk மியூசிக் சந்தா, Airtel Xstream App பிரீமியம் சந்தா ஆகியவை பிற துணை நிரல்களில் அடங்கும். இந்த ப்ளான் FASTag-ல் ரூ. 100 கேஷ்பேக்கையும் வழங்குகிறது. திருத்தப்பட்ட ஏர்டெல் ரூ. 558 பேக் அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. மேலும், Airtel Thanks app அல்லது நிறுவனத்தின் வலைத்தளம் (company website) வழியாக ரீசார்ஜ் செய்யலாம். செல்லுபடி தன்னைமையின் இந்த குறைப்பு முதலில் Telecom Talk-ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏர்டெல் சமீபத்தில் மேலும் ஆறு போன்களுக்க்கு வைஃபை அழைப்பிற்கான ஆதரவை விரிவுபடுத்தியது. மேலும், அவை Samsung Galaxy S10, Galaxy S10+, Galaxy S10e, மற்றும் Galaxy M20, அதேபோன்று OnePlus 6 மற்றும் OnePlus 6T ஆகிய போன்களாகும். அவர்களின் வீடுகள்/அலுவலகங்களுக்குள் வைஸ்-ஃபை வழியாக வாய்ஸ் ஓவர்க்கு மாறுவதற்கு உதவுகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த சேவை டில்லி/NCR-யில் மட்டுமே நேரலையில் உள்ளது. மேலும், இது விரைவில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Airtel, Airtel Rs 558 prepaid plan
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »