'லெனோவா டேப் V7' டேப்லெட் கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் 6.9-இன்ச் FHD திரை, செல்லுலார் இணைப்பு வசதி, 30 மணிநேர பேச்சு நேரத்தை வழங்கக்கூடிய ஒரு பெரிய 5,180mAh அளவு பேட்டரி, 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா. 'லெனோவா டேப் V7' டேப்லெட்டின் விலை ரூ. 12,990. முன்னதாக, லெனோவா டேப் V7 "டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்-இன்-ஒன்" என இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
லெனோவா டேப் V7 டேப்லெட் இந்தியாவில் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. 3GB RAM + 32GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 12,990 ரூபாய் என்ற விலையிலும், மற்றும் 4GB RAM + 64GB சேமிப்பு அளவு லெனோவா டேப் V7 டேப்லெட் 14,990 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த டேப்லெட் ஆகஸ்ட் 1 முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. விரைவில் அமேசான், லெனோவா உள்ளிட்ட பிற தளங்களிலும், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் கிடைக்கவுள்ளது.
6.9-இன்ச் FHD திரை, 1080x2160 பிக்சல்கள், 18:9 திரை விகிதம், 81 சதவிகித திரை-உடல் விகிதம் என்ற திரை அம்சங்களை கொண்டுள்ளது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னெப்ட்ராகன் 450 ப்ராஸசரை கொண்டுள்ளது. 64GB வரை சேமிப்பு அளவை கொண்டுள்ள இந்த டேப்லெட்டில் 128GB வரையில் சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
இந்த டேப்லெட் 13 மெகாபிக்சல் பின்புற கேமராவையும், 5 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 4G வசதியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7'. பயனர்கள் அழைப்புகள், மெசேஜ் என அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5,180mAh அளவு பேட்டரியை கொண்டுள்ளது இந்த 'லெனோவா டேப் V7' டேப்லெட்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்