Lenovo Tab Plus மாடலின் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 8,600mAh பேட்டரி இருப்பது மலைக்க வைக்கிறது.
Photo Credit: Gadgets 360
Lenovo Tab Plus உலகளவில் வெளியிடப்பட்டது. டேப்லெட்டில் டால்பி அட்மோஸ் வசதியுடன் எட்டு ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் 11.5 இன்ச் 2K எல்சிடி திரை பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ஸ்பீக்கர்களை புளூடூத் ஸ்பீக்கராகப் பயன்படுத்தப்படலாம். இந்த டேப்லெட் மூலம் இசை அல்லது பாட்காஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்யலாம். MediaTek Helio G99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 மூலம் இயங்குகிறது. 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 8,600mAh பேட்டரி இருப்பது மலைக்க வைக்கிறது. Lenovo Tab Plus இந்தியாவில் வெளியிடப்படுமா என்பதை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
Lenovo Tab Plus தற்போதுஉலகளாவிய சந்தைகளில் 25,000 ரூபாய் மதிப்பில் விற்கப்படுகிறது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த டேப்லெட் விற்பனைக்கு வரும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு செய்யலாம். மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
Octa Core MediaTek Helio G99 6nm சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். Arm Mali G57 MC2 GPU கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டேப்லெட் மாடலை நம்பி வாங்கலாம்.
இதன் LCD திரை 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 400nits பிரகாசத்துடன் இருக்கும். 8 எம்பி ஆட்டோஃபோகஸ் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. இந்த கேமரா உதவியுடன் ஃபுல் எச்டி வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பி கேமராவும் இதில் உள்ளது. Wi-Fi 5, ப்ளூடூத் 5.2 மற்றும் USB Type-C போர்ட் இணைப்பு வசதி உள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் பெரிய டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Microsoft Patches Windows 11 Bug After Update Disabled Mouse, Keyboard Input in Recovery Mode
Assassin's Creed Shadows Launches on Nintendo Switch 2 on December 2