பேஸ்புக், ட்விட்டரில் தனிநபர் அக்கவுண்ட் முடக்கப்படுவது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
தேவயற்ற கருத்துக்களை பகிர்பவர்களின் பேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை சமூக வலைத்தள நிர்வாகங்கள் முடக்கி வருவதற்கு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே, அரசு திட்டங்கள், கருத்துக்கள், விமர்சனங்கள் என ட்ரம்பின் ட்வீட்ஸில் சர்ச்சைகள் அதிகமாக காணப்படும். இந்நிலையில், சமூக வலைத்தள கணக்குகள் முடக்கப்படுவது குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்து வைரலாகியுள்ளது.
“சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட சில நபர்களின் கணக்குகளை முடக்குவது சரியல்ல. ஏனெனில், நாளை நம்முடைய கணக்கும் முடக்கப்படும் அபாயம் உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார்
ட்ரம்ப் ட்விட்டர் கணக்கை 53 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சமூக வலைத்தளங்களை விமர்சித்து வரும் ட்ரம்ப், கொள்கைகளை மக்களிடம் பரப்ப எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்