நீங்கள் இப்போது நான்கு நபர் வரை நேரடியாக இன்ஸ்டாகிராமில் வீடியோ சாட் செய்யலாம்
இன்ஸ்டாகிராம் தனக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்கள் இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்களை சேர்த்துக்கொண்டே வருகிறது. அதன் வரிசையில், ஃபேஸ்புக் சமீபத்தில் ஸ்னாப்சாட் மற்றும் ஃபேஸ்டைம் போன்ற தளங்களுக்கு போட்டியாக புதிய வீடியோ சார்ந்த தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நேரடி மெசேஜ் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வீடியோ காலிங் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி பற்றி பல்வேறு வதந்திகள் பேசப்பட்டு வந்த சமயத்தில் முதல் அதிகாரப்பூர்வ தகவல் கடந்த மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஃப்8 டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் டிவி வசதியைத் ( இனி ஐஜிடிவி) தொடர்ந்து, தற்போது வீடியோ சாட், எக்ஸ்ப்ளோர் டேப், புதிய கேமரா எஃபெக்ட்ஸ் ஆகிய புதிய அம்சங்களை அறிவித்திருக்கிறது. இதை அனைத்தும் இன்ஸ்டாகிராம், கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது.
முதலில், இன்ஸ்டாகிராம் டைரக்டில் வருகிற வீடியோ சாட் வசதி. நீங்கள் இனி நண்பருடனோ அல்லது குழுவாகவோ இன்ஸ்டாகிராம் டைரக்டின் மூலம் வீடியோ சாட் செய்யலாம். இது இன்ஸ்டாகிராம் மொபைல் செயலிகளில் வரத் தொடங்கிவிட்டது. இதன்மூலம், டைரக்ட் பாக்ஸில் வலது புறம் இருக்கும் கேமரா ஐகானைத் தொட்டு நான்கு நண்பர்கள் ஒரே சமயத்தில் வீடியோ சாட் செய்யலாம். குறிப்பாக இது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஸ் சாதனங்களில் வேலை செய்கிறது.
ஒரு வீடியோ சாட் தொடங்குவதற்கு டைரக்ட் இன்பாக்ஸ் சென்று வீடியோ சாட் செய்ய விரும்பும் நண்பரின் மெசேஜ் ஓபன் செய்யுங்கள். பின்னர் வலது புறத்தில் கேமரா ஐகானை க்ளிக் செய்தால் அந்த நபருக்கு வீடியோ சாட் அழைப்பு செல்லும். வீடியோ சாட் செய்யும் போதே, அதை மினிமைஸ் செய்து இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்வது, புகைப்படம் அனுப்புவது, ப்ரவுஸ் செய்வது, ஸ்டோரி போஸ்ட் செய்வது உள்ளிட்ட பல வேலைகளை செய்யலாம்.
இந்த வீடியோ சாட் அம்சம் க்ரூப்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போல நான்கு நண்பர்கள் வரை நீங்கள் வீடியோ சாட் செய்யலாம். நண்பர்கள் இணைய வீடியோ சாட் விரிவடையும். மேலும் ஏதாவது ஒரு க்ரூப் வீடியோ சாட் ஆக்டிவாக இருந்தால். கேமரா ஐகான் ப்ளூவாக மாறும். வீடியோ சாட்டில் சேர கேமரா ஐகானை டேப் செய்ய வேண்டும். வீடியோ சாட்டிற்கு எந்த விதமான நேர அளவும் கிடையாது. வீடியோ சாட்டில் இருந்து வெளியேற கீழ் இருக்கும் ரெட் ஐகானை டேப் செய்ய வேண்டும்.
நீங்கள் நேரடியாக மெசேஜ் செய்கின்றவர்களுடன் மட்டும் தான் வீடியோ சாட் செய்ய முடியும். ஒருவரை நீங்கள் ப்ளாக் செய்தால், அவர் தொடர்ந்து உங்களுடன் வீடியோ சாட் செய்ய முடியாது. குறிப்பிட்ட சில கணக்குகளை ம்யூட் செய்யும் வசதி உள்ளது. புதிய வீடியோ சாட் அறிவிப்புகளை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் கியர் ஐகானை க்ளிக் செய்து புதிய அறிவிப்புகளை காணலாம்.
ஏஆர் கேமரா எஃப்பெக்ட்ஸை, இன்ஸ்டாகிராம் நிறுவன பார்ட்னர்களான அரியானா கிராண்டே, பச்ஃபீட், லிசா கோஷி, பேபி ஏரியல், என்பிஏ உள்ளிட்ட நிறுவனங்கள் வடிவமைக்கின்றனர். இதில் ஏதேனும் கணக்கிகளை ஃபால்லோ செய்தால் அதன் ஸ்பெஷல் எஃப்பெக்ட்ஸ் தானாக உங்களுடைய இன்ஸ்டாகிராம் கேமராவில் வரும். இந்த கணக்குகளை ஃபால்லோ செய்யாதவர்கள் அவர்களின் நண்பர்கள் ஸ்டோரியில் வருகிற போது, அல்லது இந்த எஃப்பெக்ட் உள்ள ஏதாவது ஒரு டைரக்ட் மெசேஜின் மூலமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
![]()
இறுதியாக இன்ஸ்டாகிராம் ஃப்8 மாநாட்டில் உறுதியளித்த மற்றுமொரு அம்சத்தை கொண்டு வருகிறது. மறுவடிவமைக்கப்பட்ட எக்ஸ்ப்ளோர் டேப் அறிமுகம் செய்துள்ளது. அது தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டிற்கு வருகிறது, இந்த டேப் பல பாகங்களாக தலைப்புகளுக்கு ஏற்ப பிரிக்கப்பட்டு அதைச் சார்ந்த தகவல்கள் அதற்கு கீழ் வரும். தினசரி 200 மில்லியன் பேர் எக்ஸ்ப்ளோர் டேப் வந்து செல்வதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.![]()
இந்த சேனல் தலைப்புகள நம்முடைய விருப்பத்திற்கேற்ப எக்ஸ்ப்ளோர் டேபில் பயன்படுத்தலாம் என இன்ஸ்டாகிராம் தெரிவித்திருக்கிறது. இதில் விளையாட்டு, தொலைக்காட்சி, மூவீஸ் என பல வகையான தலைப்புகள் இருக்கின்றன. கூடுதலாக உங்களுக்கென தனியாக ஒரு (ஃபார் யூ) பகுதி உங்களுடைய விருப்பத்திற்கு, கடந்த கால பழக்கத்திற்கு ஏற்றவாறு மற்ற பயனர்களின் பதிவுகள் இதன் கீழ் வரும். குறிப்பிட்ட ஒரு சேனலை நீங்கள் நீக்கிக் கொள்ளலாம். அதற்கு அந்த சேனலை அழுத்தி ம்யூட் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதை பின்னர் தேவைப்படுகின்ற போது ம்யூட்டில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Series to Offer Built-In Support for Company's 25W Magnetic Qi2 Charger: Report
Airtel Discontinues Two Prepaid Recharge Packs in India With Data Benefits, Free Airtel Xtreme Play Subscription
Samsung Galaxy Phones, Devices Are Now Available via Instamart With 10-Minute Instant Delivery