ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது சற்று சறுக்கல்களை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் தனியுரிமை சிக்கலில் தவிப்பதால் அதன் பயனர் அளவு மற்றும் வருவாய் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட அளவுகளை விடவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.
மேலும் ஃபேஸ்புக், அதிக லாபமில்லாத அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால், வருகின்ற காலாண்டுகளிலும் கூட அதன் வருவாய் மேலும் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. பல்வேறு ஒழுங்கு நடவடிக்கை அழுத்தங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு மத்தியில், அதன் பயனர்களுக்கு தகவல் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தேர்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
இந்த வருவாய், கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா மோசடி வெளிவந்ததைத் தொடர்ந்து முதல் முழு காலாண்டையும் இணைத்துள்ளது. ஆனால் விமர்சகர்கள், பயனர்களின் எண்ணிக்கை வளர்ச்சி குறைந்துள்ளதற்கு மே மாதம் அமலுக்கு வந்த தனியுரிமை விதிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர். மேலும் இதற்கும் டொனால்ட் ட்ரம்புடனான தொடர்பில் பல லட்சக்கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் தகவலகள் முறையின்றி பயன் படுத்தப்பட்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பங்குகள் $217.50 (ரூ. 14,930) என முடிந்த பிறகு, 17.8% சரிந்து $178.77 (ரூ.12,270) ஆக இருந்தது. புதனன்று முடிந்த பங்கு விலை கடந்த ஆண்டைவிடவும் 31% அதிகரித்திருந்தது. ஆரம்ப கட்ட வருவாய்க்கு பிறகு சிறிதளவு சரிந்திருந்த பங்குகள், ஃபேஸ்புக் தலைமை செயல்பாட்டு அதிகாரி டேவிட் வேஹ்னெர் நிறுவனத்தின் வருவாய் கூட்டத்தில், வருவாய் சரிவு பற்றி எச்சரித்தையடுத்து, அது மேலும் சரிந்தது.
தற்போதும், ஃபேஸ்புக் நிறுவனம் மோசடி குற்றச்சாட்டுகளை வணிகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் எதிர்கொண்டுள்ளது என்பதை தான் முடிவுகள் காட்டுகின்றன. எனினும் அதன் வருவாய் வால்ஸ்ட்ரீட் கணித்ததை விடவும் குறைவாக இருந்தாலும் அது 1% என்கிற அளவில் தான் இருக்கிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை, இளைஞர்களின் அதீத பயன்பாடு, அதன் தளத்தில் போலி செய்திகள் மற்றும் தகவல்களை சமாளிப்பது, வெறுப்பு பிரச்சாரம் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட தீர்க்கப்படாத கேள்விகளை இன்னும் எதிர்கொண்டு தான் இருக்கிறது.
சில சமயங்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தான் எதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதிலே முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது. பயனாளர்கள் கூறுவதை நடைமுறைப்படுத்துவதிலும், வளர்ந்து வரும் பிளவுபட்ட உலகில் நடுநிலையான தளமாக நிலைப்பதிலும் திணறி வருகிறது. தனியுரிமையை பாதுகாக்கும் அதே சமயத்தில் முடிந்தவரையில் அதனுடைய பயனர்களிடமிருந்து தகவல்களை சேகரித்து வருகிறது.
இந்நிறுவனம் கடந்த ஆண்டை விடவும் 11% அதிகமாக, ஜூன் 30 வரையில் 2.23 பில்லியன் மாதாந்திர பயனர்களை கொண்டுள்ளது. ஃபேக்ட் செட்டின் படி இது 2.25 பில்லியன் இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். பயனர் எண்ணிக்கை வளர்ச்சி மாதாந்திர மற்றும் தினசரி அளவிலும் வட அமெரிக்கா முழுவதும் சீராக இருந்தது, எனினும் இது ஐரோப்பாவில் சற்று சரிந்ததுள்ளது.
ஃபேஸ்புக் $5.1 பில்லியன் (தோராயமாக ரூ. 35,000 கோடி) அதாவது ஒரு பங்கிற்கு $1.74 (ரூ. 120) வருவாய் ஈட்டியுள்ளது. இது 31% அதிகமாகும்.
ஆனால் வருவாய் 42% அதிகரித்து $ 13.23 பில்லியன் (தோராயமாக ரூ. 90,900 கோடி) என உள்ளது, வால்ஸ்ட்ரீட் எதிர்பார்த்த அளவை விடவும் ($13.34 பில்லியன்) சற்று குறைவாகவே உள்ளது.
ஐரோப்பிய தனியுரிமை விதிகளான பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜீடிபிஆர்) காலாண்டின் வருவாயில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் இவை இந்த காலாண்டு முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் அமலுக்கு வந்தது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
2012-ல் ஒரு பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ஃபோட்டோக்கள் பகிரும் தளம் இன்ஸ்டாகிராம். தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது, அது போலவே தான் மற்றுமொரு பெரிய செயலியான வாட்ஸ் ஆப்பும். இதுநாள் வரையில் வாட்ஸ் ஆப் விளம்பரங்களை காண்பிப்பதில்லை மற்றும் அதன் நிறுவனர்களான ஜேன் கௌம் மற்றும் ப்ரையன் ஆக்டன் விளம்பரங்கள் மற்றும் பிற பிரச்னைகளுக்கு மத்தியில் ஃபேஸ்புக்கிலிருந்து விலகினர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்