இந்தியாவின் முன்னணி பாடல்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து இனி செயல்படப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த இணைதலின் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள், தாங்கள் இடும் கமென்ட்ஸ்களில் இனி பாடல்களையும் பயன்படுத்த முடியும்.
டி-சீரிஸ் மியுசிக், ஜீ மியுசிக் மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைவதன் மூலம் இந்தியாவில் இருக்கும் சுமார் 300 மில்லியன் ஃபோஸ்புக் பயனர்களுக்கு தங்களது விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட முடியும்.
'மக்கள் இனி தங்களது வீடியோக்களில் விருப்பப்பட்ட பாடல்களை இணைக்க முடியும். இதன் மூலம் ஒருவரின் நினைவுகளை இன்னும் உணர்ச்சிபூர்வமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஃபேஸ்புக் மூலம் பகிற முடிகிறது' என மனிஷ் சோப்ரா, ஃபேஸ்புக் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் இயக்குநர் தெரிவித்தார்.
சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஃபேஸ்புக் நிறுவனம் இதுபோன்ற இசை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.
விரைவில் இன்னும் பல இசை தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளது ஃபேஸ்புக்.
இந்தக் கூட்டணி குறித்து யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆனந்த குர்னானியிடம் கேட்டபோது, அவர், 'இந்த ஃபேஸ்புக் இணைப்பின் மூலம் மக்களுக்கு புதிய பாடல்களை கேட்கவும், பாடல்களை பயன்படுத்தி தங்களது கருத்துகளை பகிறவும் முடியும்' என கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்