Amazon Great Indian Festival Sale 2019 இன்னும் 10 நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் மொபைல் போன்கள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி விலைக்குறைப்பை அமேசான் செய்துள்ளது.
Photo Credit: Amazon India
நூற்றுக்கணக்கான எலக்ட்ரானிக் பொருட்கள் செம ஆஃபரில் விற்பனைக்கு வரவுள்ளன.
Amazon Great Indian Festival Sale 2019 என்ற பெயரில் மீண்டும் அதிரடி ஆஃபர்களை அமேசான் நிறுவனம் வழங்கவுள்ளது. செப்டம்பர் 29-ம்தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த அதிரடி ஆஃபர்கள் அமேசான் இணைய தளத்தில் ஆரம்பம் ஆகும்.
இதனை பிரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 28-ம்தேதி மதியம் 12 மணிக்கே பெற்றுக் கொள்ள முடியும். இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிக ஆஃபர்களை நாம் எதிர்பார்க்கலாம்.
இதைத் தவிர்த்து, ஃபேஷன், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவைகளிலும் அதிரடி விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் டீசரை அமேசான் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதன்படி சுமார் 100-க்கும் அதிகமான மொபைல் போன்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனைக்கு வரவுள்ளது.
வாடிக்கையாளர்கள் எளிதாக பொருட்களை பெறும் வகையில், கட்டணம் இல்லாத மாத தவணை பணம் செலுத்தும் முறையையும் அமேசான் வழங்கியுள்ளது. இதேபோன்று பொருட்களை எக்சேஞ்ச் செய்து கொண்டு புதிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பிடத்தகுந்த வகையில் இந்த Amazon Great Indian Festival Sale விற்பனையில் புதிதாக 15 மொபைல் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. சில மொபைல் போன்களுக்கு ஓராண்டுக்கு இலவச ஸ்க்ரீன் மாற்றும் சலுகைகளையும் அமேசான் வழங்குகிறது.
ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் நீங்கள் என்றால் உங்களுக்கு, 10 சதவீத உடனடி சலுகையை பெற்றுக் கொள்ளலாம். மொபைல்களைத் தவிர்த்து சுமார் 200 நிறுவனங்களில் இருந்து 6 ஆயிரம் எலக்ட்ரானிக் பொருட்கள் சலுகை விலையில் விற்பனைக்கு வருகிறது.
லேப்டாப், வயர்லெஸ் இயர்போன்கள், டிவி, போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கூடுதல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. அமேசான் தனது Amazon Great Indian Festival Sale அறிவித்திருக்கும் நிலையில், அதே நாளில் போட்டி நிறுவனமான ஃப்ளிப் கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019- என்ற சலுகை விற்பனை நாட்களையும் அறிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் போட்டியில் இறங்கி அதிக ஆஃபர்களை வழங்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Qualcomm Unveils Robotics-Focused Dragonwing IQ10 Series SoC, Expands IoT Portfolio Ahead of CES 2026