சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு வரி விதித்த அரசை எதிர்த்து உகாண்டா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய சட்ட வல்லுநர், பாப் பாடகர் கியாகுலான்யி செண்டாமு புதிய வரி விதிப்பால், மக்களிடம் பாடல்களை சந்தைப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல், சமூக வலைத்தளங்களை பயன்படுத்த மக்கள் வரி செலுத்தி வருகின்றனர். இணைய சேவைக்கு செலுத்தும் கட்டணத்தை தவிர வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தினசரி 200 உகாண்டா சில்லிங் (5 செண்ட்ஸ்) வரி செலுத்தி வருகின்றனர்.
வரி விதிப்பை எதிர்த்து உகாண்டா தலைநகரம் கம்பாலாவில் நடைப்பெற்ற போராட்டத்தில், இரண்டு பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசி போராட்டத்தை காவல் துறையினர் கலைத்தனர். போராட்டம் நடைப்பெற இருப்பது குறித்து முன்னரே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காததால், காவல் துறையினர் போராட்டத்தை கலைத்தனர் என்று உகாண்டா தேசிய காவல்துறை செய்தி தொடர்பாளர் எமிலியன் கெயிமா தெரிவித்தார்.
புதிதாக அமல்படுத்தியிருக்கும் வரியிலிருந்து பெறப்படும் பணம், நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என உகாண்டா அரசு தெரிவித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் உகாண்டாவை ஆட்சி செய்து வரும் குடியரசு தலைவர் யோவெரி முசுவெனி, சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு வரி விதிக்க கோரி முதலில் அறிவித்தார்.
41 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ள உகாண்டா நாட்டில், 17 மில்லியன் மக்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கருத்து சுதந்தரம் பறிக்கும் நோக்கில் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் வரியை நீக்க கோரரி உகாண்டா அரசுக்கு ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் வற்புறுத்தியுள்ளது.
வரி விதிப்பு குறித்து பேசிய உகாண்டா பிரதமர் ருஹாகனா ருகுண்டா, சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறித்து ஆலோசிக்கப்படும் என்று உறுதியளித்தார். அடுத்த வாரம், வரி விதிப்புக்கு பதிலாக புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features