இதன் மூலம் ட்விட்டரில் உங்களை பின்தொடர்பவர்களுடன் தொடர்பு கொள்வது என்பது எளிதாகிறது.
ட்விட்டரில் இந்த ஆப்ஷன் புதுசு!! தெரிஞ்சுகோங்க..
iOS இயங்குதளத்தில் ட்விட்டர் பயன்படுத்தும் பயனர்களக்கு ஒரு புதிய வசதியை அந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட ட்விட்டுகளை, ரீட்விட் செய்யும் போது அதில், கருத்துகளையும் பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் ட்விட்களை ரீட்விட் செய்யும் போது மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதனை தெரிந்து கொள்ள உங்கள் ட்விட்டர் பதிவின் கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்களது பதிவை ரீட்விட் செய்தவர்களின் பட்டியலையும், அவர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ட்விட்டரில் உங்களை பின்தொடர்பவர்களுடன் தொடர்பு கொள்வது என்பது எளிதாகிறது.
Don't miss the Tweets about your Tweet.
— Twitter (@Twitter) May 12, 2020
Now on iOS, you can see Retweets with comments all in one place. pic.twitter.com/oanjZfzC6y
இந்த புதிய வசதி குறித்து ட்விட்டர் நிறுவனம், ஒரு ட்விட்டில் குறிப்பிட்டுள்ளது. அதில், iOS இயங்குதளங்களில் இனி ஒரே இடத்தில் ரீட்விட் செய்யதவர்கள் பட்டியலையும், அவர்களின் கமெண்டுகளையும் தெரிந்துகொள்ள முடியும். இதனை காண உங்கள் ட்விட்டர் பதிவுக்கு கீழ் உள்ள ரீட்விட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில், நீங்கள் இரண்டு பிரிவுகளை காணலாம். ஒன்று கமெண்டுகளுடனும், மற்றொன்று கமெண்டுகள் இல்லாமலும் இருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்களது பதிவுகளுக்கு கமெண்டுகளுடன், ரீட்விட் செய்பவர்களுடன் தொடர்பு கொள்வதை எளிதாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொறியியல் நிபுணர் ஜேன் மஞ்சுன் வோங், சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், ஆண்ட்ராயிடில் இந்த வசதி குறித்து சோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார். மேலும், அவரது பதவில், ஒரு ட்விட்டர் பதிவின் கீழ், ரீட்விட் செய்தவர்களின் எண்ணிக்கை விவரமும், கமெண்டுகளுடன் ரீட்விட் செய்தவர்கள் விவரமும் தனித்தனியாக தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately