2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 புதிய தொழில்நுட்ப வேலைவாய்ப்பை ஃபேஸ்புக் லண்டனில் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த 100 வேலைகள் உருவாக்கப்படவுள்ளது. போலியான செய்திகள், போலியான உள்ளடக்கம் கொண்ட கருத்துகள், போலி கணக்குகள் ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்கு அவற்றை நீக்குவதற்கு இந்த வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ள ஃபேஸ்புக் தலைநகரம் லண்டனில் 3,000க்கு மேற்பட்ட பணியிடங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் கருத்துகளில் போலியான, ஆபாசமான கருத்துகளை மிகத் தீவிரமாக நீக்கி வருகிறது. இந்த பணியினை சீரிய முறையில் செய்யவே பல பணியிடங்களை நிரப்பவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்