Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!

முதற்கட்ட விசாரணையில் இது கொலையல்ல என்பதும் தற்கொலை தான் என்பதும் தெரியவந்துள்ளதாக மென்லோ பார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!
ஹைலைட்ஸ்
  • முதற்கட்ட விசாரணையில் கொலையல்ல என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
  • தங்களது ஊழியர் தான் என்பதை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
  • ஊழியர் தற்கொலை செய்து கொண்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது - பேஸ்புக்
விளம்பரம்


அமெரிக்காவில், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து மென்லோ பார்க் போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மென்லோ பார்க்கில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பகல் 11.30 மணி அளவில், 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்ற போது, அந்த நபர் எந்த அசைவுமின்றி கிடந்தார். தீயணைப்பு வீரர்களும், துணை மருத்துவர்களும் அவருக்கு மருத்துவ உதவிகளை வழங்கினர். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அதில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இது கொலையல்ல என்பதும் தற்கொலை தான் என்பதும் தெரியவந்துள்ளதாக மென்லோ பார்க் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

தற்கொலை செய்தவர் தங்களது ஊழியர் தான் என்பதை பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், போலீசார் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. யாருப்பா அது பட்ஜெட்ல ஐபோன் கேட்டது? iPhone 16e விலையில் ரூ.11,500 வரை டிஸ்கவுண்ட்! Apple Intelligence வசதியுடன் செம டீல்
  2. S25 சீரிஸ் வந்தா என்ன, எங்களுக்கு ராஜா 'S24 Ultra' தான்! பிளிப்கார்ட்ல ரூ.25,000-க்கு மேல விலை குறைஞ்சிருக்கு
  3. பட்ஜெட்ல ஒரு 'Ultra' போன் வேணுமா? Vivo T4 Ultra இப்போ செம சீப்! பிளிப்கார்ட் ஆஃபர்ல அள்ளிட்டு போங்க!
  4. S25-க்கே இன்னும் வழிய காணோம்.. அதுக்குள்ள S26 லீக்ஸ் வந்துடுச்சா? 50MP கேமராவுடன் களமிறங்கும் Samsung
  5. சாம்சங்-கின் அடுத்த அதிரடி! பட்ஜெட் விலையில் 5G போன் வேணுமா? Galaxy F70e-க்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
  6. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  7. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  8. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  9. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  10. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »