நியூயார்க்: தனது ஆகுமெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் சோதனை முயற்சியாக பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விடுமுறை நாட்களுக்கான ஷாப்பிங் சீசனில் சோதனை முயற்சியாக பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டி வீடியோ விளம்பரங்களின் மூலம் பயனாளர்கள் அதிக அளவில் தாங்கள் வாங்கும் பொருட்களோடு நேரடித் தொடர்பு கொள்ள முடிவது கண்டறியப்பட்டுள்ளது.
போபி ப்ரெவுன், போட்டரி பார்ன், வேஃபேர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஆகுமெண்டட் ரியாலிட்டி விளம்பரங்களை பயன்படுத்த முன்வந்துள்ளன.
முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்ஜர் ஆப்பில் பயன்படுத்தியதாகவும் இதன் மூலம் அசூஸ் மற்றும் நைக் நிறுவனங்கள் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வருங்காலங்களில் இந்த தொழில்நுட்பத்தை இன்ஸ்டாகிராமிலும் பயன்படுத்த இருப்பதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை நேரடியாக சில்லறை வர்த்தகர்களிடம் இருந்து வாங்க வழி செய்துள்ளது.
விளம்பரதாரர்களே நேரடியாக வீடியோக்களை உருவாக்கும் வகையில், எளிய முறையிலான வீடியோ உருவாக்க மென்பொருட்களையும் பேஸ்புக் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இதுகுறித்து, பேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகி அஹ்மத் டெய்லர் கூறுகையில், தற்போதைய காலகட்டத்தில் வீடியோ வழியாக பொருட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்று தெரிவித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்