ஃபேஸ்புக் நிறுவனம் உலகளவில் இரண்டு பில்லியன் பயனாளர்களைக் கொண்டு வளர்ந்திருந்தாலும், பெரும் பகுதியாக இருக்கும் இளைஞர்களின் விருப்பத்தை இழந்துவிட்டது
மானன் என்கிற 17 வயது இளைஞர், முகநூலில் கணக்கு வைத்திருந்தாலும் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கொள்ள பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் அல்லது ஸ்னாப்சாட் போன்ற சமூக வளைதளங்களை பயன்படுத்துகிறார்.
“ஸ்டேடஸ் அப்டேட் செய்வதற்கும், தனிப்பட்ட தகவல்களை பதிவிடுவதற்கும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதில்லை” என்கிறார் மானன்.
அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களுடன் இணைவதற்கும், மற்ற செயலிகளில் லாக் இன் செய்வதற்கும் மட்டுமே தன்னுடைய ஃபேஸ்புக் கணக்கை பராமரித்து வருகிறார் மானன்.
நண்பர்களுடன் சேட் செய்ய ஸ்னாப்சாட் தான் பயன்படுத்துகிறேன் என்கிறார் இந்த சான்ஃப்ரான்ஸிஸ்கோ இளைஞர்.
“அனைவரும் ஃபேஸ்புக் பழைய தொழில் நுட்பமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். இது பெற்றோர்கள் அனைவரும் ஃபேஸ்புக்கில் இருப்பதனால் என நினைக்கிறேன்” என்கிறார் அவர்.
ஃபேஸ்புக் நிறுவனம் உலகளவில் இரண்டு பில்லியன் பயனாளர்களைக் கொண்டு வளர்ந்திருந்தாலும், அதன் பெரும் பகுதியாக இருக்கும் இளைஞர்களின் விருப்பத்தை இழந்துவிட்டது.
ஃபேஸ்புக் நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க, சக்திவாய்ந்த நிறுவனமாக மாறியுள்ள நிலையில், இளம் பயனாளர்களுக்கான இடமாக அது பார்க்கப்படுவதில்லை, மாறாக அவர்கள் ஸ்னாப்சாட் மற்றும் ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றிற்கு மாறி வருகின்றனர்.
பியூ ஆராய்ச்சி மையத்தின் கணக்கெடுப்பின் படி, 13 - 17 வயதுள்ள அமெரிக்க இளைஞர்களில் 51% பேர் ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர், இன்ஸ்டாகிராம் 72% பேரும், ஸ்னாப்சாட் 69% பேரும் பயன்படுத்துகின்றனர். இந்த கணக்கெடுப்பில் 85% பேர் கூகுளின் வீடியோ பகிரும் சேவையான யூடயூபை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், 2014 - 15 ஆண்டு எடுக்கப்பட்ட பியூ கணக்கெடுப்பில், 71% பேருடன் ஃபேஸ்புக் முன்னணி சமூக வலைதளமாக இருந்ததிலிருந்து சரிவை சந்தித்துள்ளது.
“தற்போது இளைஞர்கள் மத்தியில் இருக்கின்ற சமூக ஊடகச் சூழல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மாறியுள்ளது” என்கிறார் பியூ ஆராய்ச்சியாளர் மோனிகா ஆண்டர்சென்.
“முன்னர் இளைஞர்களின் சமூக ஊடக பயன்பாடு ஃபேஸ்புக் சுற்றியே இருந்தது, தற்போது அவர்களுடைய பழக்கங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களைச் சுற்றி இருக்கிறது”
இந்த மாற்றங்கள் அனைத்தும் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட பயனாளர்களின் தகவல் திருட்டுகள், தவறாக தகவல்கள் பரப்புதல் உள்ளிட்ட மோசடிகளை ஒட்டி நடந்துவருகின்றன.
ஃபோரஸ்டர் ஆராய்ச்சி கணக்கெடுப்பின் படி, 34% அமெரிக்க இளைஞர்கள் ஃபேஸ்புக்கை “பெற்றோர்கள் மற்றும் முதியோருக்கான ஒரு தளமாக” பார்க்கின்றனர்.
“அமெரிக்க இணைய இளைஞர்கள் ஃபேஸ்புக்கை ஒரு பொருளாக பார்க்கின்றனர், மற்ற நிறுவனங்கள் வழங்குகின்ற முக்கியமான சேவைகள் ஃபேஸ்புக்கை காட்டிலும் கவனத்தை ஈர்க்கின்றனர்” என்றார் ஃபாரஸ்டர் ஆராய்ச்சியாளர் லாய்
“நிறுவப்பட்ட சமூக வலைதளங்கள் ஒரு அடையாள சிக்கலை சந்திக்கின்றன”
இமார்க்கடெர் ஆராய்ச்சியின் மற்றுமொரு அறிக்கையில், ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டில் 24 வயதிற்குள்ள இரண்டு மில்லியன் பயனாளர்களை இழக்கும் என்கிற முடிவுக்கு வருகிறது.
உலகளவில் இன்றும் ராஜா தான்
ஃபேஸ்புக் நிறுவனம் தற்போதும் சமூக ஊடக பரப்பில் ராஜாவாக இருக்கிறது, இன்றும் கடந்து ஆண்டுகளை விட குறைவான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
2018ன் முதல் காலாண்டில் அதனுடைய லாபம் கடந்த ஆண்டைவிட 63% அதிகரித்து 5 பில்லியன் டாலராக இருக்கிறது மற்றும் மொத்த வருமானம் 49% அதிகரித்து 11.97 பில்லியன் டாலராக இருக்கிறது.
மேலும் இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ்ஆப் மற்றும் ஆகுலஸ் டிவிசனின் மெய்நிகர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு செயலிகளின் சேவைகளுடன் விரிந்து வருகிறது
இளம் பார்வையாளர்களை கவர, ஃபேஸ்புக் பேரன்டல் கட்டுப்பாட்டுடன் கூடிய குழந்தைகளுக்கான மெசெஞ்ரை அவர்களுக்கு சொந்தமான ஃபேஸ்புக் கணக்கு வைத்துக்கொள்ள அறிமுகப்படுத்தியது, இந்த சேவை சமீபத்தில் பெரு மற்றும் கனடாவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தன்னுடைய தளத்திலும் அதற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமிலும் யூடியூப் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வீடியோ சேவைகளுக்கு போட்டியாக சொந்தமான வீடியோ சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
2.2 பில்லியன் பயனர்களுடன் ஃபேஸ்புக், 191 மில்லியன் பயனர்கள் உள்ள வாட்ஸ்ஆப் மற்றும் 336 மில்லியன் பயனர்களுடைய ட்விட்டரை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னணியில் இருக்கிறது.
”ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு போட்டியாக வர ஸ்னாப்சாட் நிறுவனம் இன்னும் அதிக அளவில் வளர வேண்டியிருக்கிறது” என்கிறார் இமார்க்கெட் சமூக ஊடக ஆய்வாளர் டேப்ரா வில்லியம்சன்.
ஆனால் ட்ரெண்ட் ஷோ சேவைகளான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் அதன் எதிர்ப்பார்ப்பை விடவும் இளைய ஸ்மார்ட்போன் பயனர்களின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.
“ஸ்னாப்சாட்டில் நீங்கள் அனிமேசன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்க்கலாம், அது தான் இளைய தலைமுறையினருக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது” என்கிறார் 16 வயது சான்ஃப்ரான்சிஸ்கோ பள்ளி மாணவர் சார்லோட்டே
மானன் தனக்கு இசை மற்றும் புகைப்பட கலையில் படைப்பாற்றல் மிக்கவர்களுக்கு பயன்படும் இன்ஸ்டாகிராம் தான் பிடிக்கும் என்றார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Rockstar Games Said to Have Granted a Terminally Ill Fan's Wish to Play GTA 6
Oppo K15 Turbo Series Tipped to Feature Built-in Cooling Fans; Oppo K15 Pro Model Said to Get MediaTek Chipset