ஷாவ்மி விலை உயர்வு, ஏற்கனவே பிளிப்கார்ட்டில் உள்ள சில போன்களுக்கு பிரதிபலிக்கிறது
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, அனைத்து தொலைபேசி நிறுவனங்களும், தங்களின் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனிடையே, ஜிஎஸ்டி கவுன்சில், கடந்த மாதம் இந்தியாவில் மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 12-18 சதவீதமாக உயர்த்தியது. ஜிஎஸ்டி வீதத்தின் அதிகரிப்பால் இந்தியாவில் அனைத்து போன்களின் விலையும் உயரும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே, இந்தியாவில் ஷாவ்மி வழங்கக்கூடிய எம்ஐ ரெட்மி மற்றும் போக்கோ-பிராண்டட் போன்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனை ஷாவ்மி இந்தியா நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் உறுதிபடுத்தினார். மேலும், Xiaomi தனது வன்பொருள் தயாரிப்புகளிலிருந்து 5 சதவீதத்திற்கு மேல் லாபம் ஈட்டக்கூடாது என்ற விதியைப் பின்பற்றுகிறது என்று ஜெயின் தனது ட்வீட்டில் குறிப்பிட்டர்.
இந்தியாவில் Poco X2-வின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் முந்தைய விலை ரூ.16,999, தற்போதைய விலை ரூ.17,999 ஆகும். போகோ எக்ஸ் 2-வின் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டின் விலை இப்போது ரூ.16,999-யாகவும், 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.20,999-யாகவும் விலை அதிகரித்துள்ளது. இந்த போன்களின் அதிகரித்த விலையை பிளிப்கார்ட்டில் காணலாம்.
பிளிப்கார்ட்டில், Redmi K20-யின் 6 ஜிபி + 64 ஜிபி பதிப்பின் விலையும், அதே சமயம் Redmi K20 Pro-வின் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலையும் ரூ.2,000 உயத்தப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தவிர, மற்ற தளங்களில் போன்களின் திருத்தப்பட்ட விலையை காணமுடியவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.