Photo Credit: சியோமி
சியோமி கடந்த செவ்வாயன்று தனது புதிய தயாரிப்புகளான ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மற்றும் எம்ஐபே ஆன்லைன் பண சேவை ஆப் பேன்றவற்றை டெல்லியில் அறிமுகம் செய்தது.
அதை தொடர்ந்து இந்தியாவில் மேலும் ஒரு தயாரிப்பு தொழிற்சாலையை துவங்கபோவதாக சியோமி நிறுவனம் அறிவித்தது.
இதன் மூலம் இந்தியாவில் ஏழாவது தொழிற்சாலையை துவங்கும் சியோமி இந்த புதிய தொழிற்சாலையை தமிழ்நாட்டில் துவங்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சியோமி துவங்க உள்ளது.
'இந்த புதிய ஸ்மார்ட்போன் தயாராக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் ஃபிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதால் இங்குள்ள மக்களின் விருப்பமுள்ள டிசைனுடன் எங்களது கற்பனையும் கலந்து கொடுக்க முடிகிறது.' என சியோமி இந்தியா நிறுவனத்தின் சார்பாக முரளி கிருஷ்ணன்.பி தெரிவித்தார்.
இந்தியாவில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான், ஃபிளக்ஸ் மற்றும் ஹைபேட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றனர். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் இனி சியோமி நிறுவனத்தால் ஒரு வினாடிக்கு 3 ஸ்மார்ட்போன்களை உருவாக்க முடியும்.
நேற்று டெல்லியில் ரெட்மி கோ போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய தொழிற்சாலை பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. மிகவும் விமர்சையாக நடந்த இந்த விழாவில் ரெட்மி கோ போனுடன் எம்ஐ பே என்னும் ஆன்லைன் பணபரிவர்த்தனை செய்யும் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்