இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது
சியோமி நிறுவனம், மூன்று பின்புற கேமராக்கள் கொண்ட மொபைல் போனை அடுத்ததாக இந்தியாவில் வெளியிட வாய்ப்புள்ளது. இது குறித்து சியோமி நிறுவனம், ஒரு வீடியோ டீசர் வெளியிட்டுள்ளது. அதை வைத்துப் பார்க்கும் போது சியோமி சார்பில், அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள போனில் 3 பின்புற கேமரா கொண்ட மாடல் இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. ஆனால், டீசரை வைத்து ஒரு முடிவுக்கு நம்மால் வர முடியவில்லை. அதே நேரத்தில் சியோமி இந்தியா நிறுவனத்தின் மனு குமார் ஜெயின், ‘குவால்கம் ஸ்னாப்டிராகன் 700 வகை கொண்டு அடுத்ததாக போன் வெளியிட உள்ளோம்' என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த இரண்டு வசதிகளையும் ஒரே போன் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
சியோமி சார்பில் வெளயிடப்பட்டுள்ள வீடியோவில், ஒரு கிரகத்தை, சிங்கிள் கேமரா, டூயல் கேமரா மற்றும் மூன்று கேமராக்கள் வட்டமிடுவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி, இந்தியாவில் ஏற்கெனவே சிங்கிள் மற்றும் டூயல் கேமரா வகைகளை கொண்ட போனை வெளியிட்டுவிட்டதால், அடுத்ததாக மூன்று கேமரா கொண்ட மாடலைத்தான் அறிமுகம் செய்யும் என்று யூகிக்க முடிகிறது.
இந்தியாவுக்கு வெளியே சியோமி நிறுவனம் விற்பனை செய்து வரும் எம்ஐ 9 மற்றும் எம்ஐ 9 SE போன்களில் மூன்று பின்புற கேமரா வசதி இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு போன்களிலும் ஸ்னாப்டிராகன் 700 வகை ப்ராசஸர் இல்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்திய சந்தையில், ஒரு புது வித மொபைல் போனுக்காக சியோமி தயாராகி வருவது தெரிகிறது.
இந்த டீசரை வைத்து மட்டும் ஸ்திரமான ஒரு முடிவுக்கு வர முடியாது. மேலும் தகவல்களுக்காக நாம் பொறுத்திருக்க வேண்டும்.
அதே நேரத்தில் சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, சீனாவில் ஒரு புதிய போனை வெளியிட தயாராகி வருகிறது. அந்த போனில் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னாப்டிராகன் 855 எஸ்.ஓ.சி ப்ராசஸர் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் எனப்படுகிறது. மே 13 ஆம் தேதி இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Pad 5 Will Launch in India Alongside Oppo Reno 15 Series; Flipkart Availability Confirmed